எங்கோ ஒரு நாள் .. ஒரு நடை பயணத்தில் .. உன் விரல் கோர்த்து கொண்டு ..!

Dec 19, 2024,04:36 PM IST

- ராஜ் பிரியன்




விடியலுடன் பூக்களிடம் வன்முறையில் ஈடுபட்டுவிட்டேன்...

என்னவளின் கூந்தலுக்கு அழகு சேர்க்க சொல்லி 

ம்ம்ம்...! 

கொடுமைக்காரன் போல் 

ஒரு மொட்டுகளைக் கூட விட்டு வைக்கவில்லையே...

அத்தனையும் அவளுக்கே சொந்தமாகட்டும்

எங்கோ ஒரு நாள் 

ஒரு நடை பயணத்தில் 

உன் விரல் கோர்த்து கொண்டு 

நம் மௌனங்கள் மட்டும் பேசிக்கொண்டிருக்க 

என் நிழலில் நீயும்

உன் நிழலில் நானும் 

நடந்து செல்லும் ஒரு சில நிமிடங்கள் 

அங்கே எனக்கான வாழ்வு முழுமை பெற

அப்போதே இறந்தாலும் சந்தோசம் தான்.

சட்டென்று நீ படும் சிறு கோபமும் 

புன்னகைக்கும் படியே நான் ரசிக்கிறேன்

அதை தவறு என்று நான் உணரும் வரை 

நீ படும் கோபத்தில் 

உன்னை கெஞ்சுவதை காட்டிலும் 

கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சுவதையே நான் விரும்புகிறேன்

நீ எத்தனை முறை கோபம் கொண்டாலும்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்