அருமை மழலையும் பேரழகுத் தமிழும்!

Feb 15, 2025,04:59 PM IST


ஓ மழலை அரும்பே

நீ என் கருவில் உருவான உயிரெழுத்து

என் மெய் தொட்டு விளையாடும் மெய்யெழுத்து

என்னை அம்மா என்றழைக்கும் முதலெழுத்து

என்னைச் சார்ந்து வளரும் சார்பெழுத்து

நீ தேம்பி அழுவது அளபெடை

நான் உன்னை ஆற்றுவது ஆற்றுப்படை

நீ உறங்க அழுவது அகவல்

உன்னை நான் தாலாட்டுவது பிள்ளைத்தமிழ்

நீ மகிழும் விளையாட்டுக்கள் திருவிளையாடற்புராணம்

நீ செய்யும் குறும்புகள்  பெரிய புராணம்

நீ பேசும் மழலைப் பேச்சு  திருவாசகம்

நீ உதிர்க்கும் புன்னகை தேவாரம்

நீ ஈரடி நடந்தால் திருக்குறள்

நீ நான்கடி நடந்தால் நாலடியார்

நீ எட்டடி நடந்தால் எட்டுத்தொகை

நீ பத்தடி நடந்தால் பத்துப்பாட்டு

நீ என் வாழ்வின் இலக்கணம்

நான் நித்தம் படிக்கும் இலக்கியம்


கவிதை: வி. ராஜேஸ்வரி

Assistant, College Office, The Madura College (Autonomous), Madurai -625 011.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்