கோவை டூ போடி.. பேருந்திலிருந்து இறக்கப்பட்ட பயணி.. வீடியோ எடுத்ததால்.. பதறிய நடத்துனர்..!

Mar 26, 2025,08:32 PM IST

கோவை: கோவை பல்லடம் வழியே சென்ற பேருந்து ஒன்றில் பயணி ஒருவரை இறங்க சொன்ன நடத்துனரை, கீழே  இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். உடனே பதறிய நடத்துனர் வேகமாக ஓடிவந்து சாரி சார்.. தெரியாம சொல்லிட்டேன்.. எனக் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


நேற்று தான் திருப்பூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில், பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர்  குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் பிளஸ் டூ மாணவி ஒருவர் பேருந்தில் ஏறுவதற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒன் சி என்ற அரசு பேருந்து ஸ்டாப்பில் நிற்காமல் வேகமாக சென்றது.


உடனே பிளஸ் டூ மாணவி தேர்வு எழுத எழுதாமல் போய்விடுமோ என்ற பயத்தில்  வேகமாக பேருந்தை துரத்தி ஓடியுள்ளார். மாணவி ஓடியதை பார்த்த சிலர் அதனை வீடியோவாக பதிவு செய்தனர். இது சோசியல் மீடியாவில் வைரனாலது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பஸ் ஓட்டுனர் முனிராஜிடம் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவரை  சஸ்பெண்ட் செய்தார்.




இந்த நிலையில், அதேபோன்று மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. கோவையில் இருந்து பல்லடம் வழியாக போடி செல்லும் பேருந்து கே. கள்ளிப்பாளையம் நிற்காது என நடத்துனர் கூறி ஒரு பயணியை கீழே இறங்கச் சொல்லி இருக்கிறார். நடத்துனரின் இந்த செயலை கீழே இருந்த ஒருவர் வீடியோவாக பதிவேற்றம் செய்தார்.


இதனைப் பார்த்த நடத்துனர் உடனே பதறிப் போய் வேகமாக  ஓடி வந்து சாரி சார்.. தெரியாம சொல்லிட்டேன்.. எனக்கூறி அந்தப் பயணியை மீண்டும் பேருந்தில் ஏற சொல்லி வற்புறுத்தி உள்ளார்.. நடத்துனரின் இந்த செயல் சோசியல் மீடியாவில் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக .. எம்.ஏ. பேபி தேர்வு!

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்