வங்கக் கடலில்.. மே 22ம் தேதி உருவாகிறது.. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு.. 24ம் தேதி வலுப்பெறும்!

May 18, 2024,06:16 PM IST

சென்னை:  வங்கக் கடலில் மே 22ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இது மே 24ம் தேதி வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தென்மேற்கு வங்கக் கடலில் மே 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது வடகிழக்கில் நகர்ந்து மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற்று அங்கு மையம் கொள்ளும். இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் கோடை மழை பெய்து வரும் நிலையில், அந்தமான் கடல் பகுதியில் நாளை தென் மேற்குப் பருவ மழை நாளையே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் 22ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் தமிழ்நாட்டுக்கும் மழை பெரிய அளவில் கிடைக்க வாய்ப்புள்ளது.




மிக மிக கன மழை எச்சரிக்கை:


இதற்கிடையே தமிழ்நாட்டில் இன்று  முதல் 21ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளை  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


20ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தில் மலைப் பகுதிகள், தென்காசி, தேனி, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


21ஆம் தேதி திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் புதுக்கோட்டை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்