சொல்லுங்களேன் சொல்லுங்களேன்
இறைவனின் கடிதத்தில் மானிடச் செல்வங்களே
நலம் நலம் அறிய ஆவல்
தாயையும் தந்தையையும் உருவாக்கி
பேரன்பு கொண்ட சுற்றத்தையும் சொந்தமாக்கி
மனித நேயத்தை மாண்புற வளர்த்து
மதிப்பு மிக்க சமுதாயத்தில்
ஓங்கிய மலையும் ஓடிவரும் அருவியும்
பாதுகாக்கும் பெருங்கடலும்
பச்சை பசுமையாய் கானகமும் காடும் கரையும்
வீசுகின்ற தென்றலில்
வாசமிகு மலர்களின் வணப்பும்
உன் கையில் ஒப்படைத்துச் சென்றேனே
அதன் நலம் நலம் அறிய ஆவல்
ஆனால் செவியுற்றதெல்லாம் கேட்டபோது
ஆதங்கத்தின் வெளிப்பாடு இக்கடிதம்
மனிதநேயம் மறந்து போனதாம்
அன்புமிக்க மழலைகளை அரவணைக்க கரங்கள் இல்லையாம்
தோள் தாங்கிய தந்தையும்
வன்கொடுமை கொடூரன் ஆனானாம்
சுயநல தேவைக்கு பலிகடா ஆக்கினாளாம்
பத்து மாதம் சுமந்து எடுத்த தாய்
கலாச்சாரம் பண்பாடும்
பாகுபாடுகளும் பிரிவுகளும் பல பல
ஒன்று பட்ட சகோதரர்கள் வாழ்ந்திருந்த காலத்தில்
வேற்றுமை எனும் அரக்கன் தொற்றாய் இடையில் வந்து விட்டான் என்று!
நல்லோர்களை உருவாக்கிய
நற்காவியங்கள் நான் தந்து
நன்றும் தீதும் கற்று தந்ததெல்லாம்
வீழ்ந்து போனதேன்?
மனிதம் வீழ்ந்து
மானுட அழிவும்
இயற்கை அழிவும்
உங்களைத் தாக்க..
படைத்தவனின் மனம் வேதனை கொள்கிறதே
எனதருமை மானிடா
எப்பொழுது எனக்கு எழுதப் போகிறாய்?
"மனிதநேயம் மலர்ந்து விட்டது
மானுடத்தில் பேதமில்லை
வக்கிரம் எல்லாம் ஒழிந்து
வண்ண வண்ண சமுதாயம் வளர்ந்து வருகிறது
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்
வாருங்கள் எம் புவியை காண" என்று!
கவிதை:
இ.அங்கயற்கண்ணி (M.sc, M.A, B.Ed)
முன்னாள் ஆசிரியர்
நெய்வேலி
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
{{comments.comment}}