- திவ்யா தங்கவேல்
என்ன எல்லோரும் என்ன பண்றீங்க.. வாங்க ரிலாக்ஸ்டா ஒரு க்யூட்டான கட்டுரையைப் படிப்போம்.. கட்டுரையில் என்னங்க க்யூட்னு கேக்கறீங்களா.. இருக்கே.. காதல் கலந்த பாசக் கதைங்க இது.. படிக்கும்போது அதை நீங்களும் உணருவீங்க.
இதை எழுத உட்கார்ந்தபோது, என்ன தலைப்பு போடலாம் என்று யோசித்தபோது மண்டைக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் சடுகுடி ஆடின.. இது போடலாமா.. இப்படி எழுதலாமா என்று நிறைய குழப்பம்.. சரி அதை அப்புறம் பார்த்துக்கலாம்னு எழுத ஆரம்பிச்சுட்டேன்
சமீபத்தில் ஹாஸ்பிட்டல் போயிருந்தேன்.. அங்கு பார்த்த காட்சிதான் இந்த கட்டுரையின் கரு.
Corona தாக்கம் இப்போது வெகுவாக குறைந்து விட்டாலும் கூட உடல் நல பாதிப்புகளுக்குக் குறைவில்லை. ஏதாவது ஒன்று வந்து கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக சளி, காய்ச்சல் போன்றவை விட்டு விட்டு வரத்தான் செய்கிறது. அதிலும் குழந்தைக்கு வந்தால் வீட்டில் உள்ள எல்லோருக்கும் வருகிறது. அடுத்தடுத்து மருத்துவமனைக்கு போக நேரிடுகிறது.
முதல் குழந்தைக்கு antibiotic மருந்துகள் நேரத்துக்கு கொடுத்து, அதை அது சாப்பிடுவதற்குள் நமக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது. என் மகனுக்கு ஜுரம் என்று மருத்துவமனை சென்ற போதுதான் அந்தக் காட்சியைப் பார்த்தேன். அன்று மருத்துவமனையில் நல்ல கூட்டம்.. ஏதோ துணிக்கடையில் இருப்பது போல.. !
ஒரு புறம் குழந்தைகளுக்கு temperature check செய்து கொண்டிருக்க, மறுபுறம் ரத்த பரிசோதனைகள் எடுக்க ஒரு கூட்டம்.. இன்னொரு பக்கம் வீஸிங் நிற்காத குழந்தைகளுக்கு nebulizer வைக்க ஒரு கூட்டம்.. என ஜே ஜே என காணப்பட்டது மருத்துவமனை. கூட்டத்துக்கு மத்தியில் குழந்தைகள் அழும் சத்தம்.. அம்மா அப்பாக்களுடன் கூட வந்த குழந்தைகள் அங்குமிங்கும் ஓடும் சத்தம்.. என பிசியான மருத்துவமனைக் காட்சி.
அப்போதுதான் அந்த அம்மா, அப்பா அவர்களது குட்டி மகன்.. மகன் தந்தையின் தோள்களில் இருந்தான். அம்மாவின் கையில் மருத்துவமனை ரிப்போர்ட்களும், கண்களில் கவலையும் குடியேறி இருந்தன. கணவரை ஒட்டியபடி நின்ற அவர் அவ்வப்போது மகனைப் பார்த்து பார்த்து கவலையை வெளிப்படுத்தினார். தாய்மைக்கே உரிய அக்கறையும், பதட்டமும், அவஸ்தையும், வலியும் ஒரு சேர வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. மனைவியின் பதட்டத்தையும், கவலையையும் பார்த்த கணவன்.. அப்படியே தனது இடது கையால் மனைவியை மெல்ல அணைத்துக் கொண்டார்.. ஒரு சில விநாடிகள்தான் அந்த Hug.. ஆனால் ஓராயிரம் அன்பையும், அரவணைப்பையும்.. ஒரு சேர வெளிப்படுத்தியது அந்த அணைப்பு.
கணவரின் அந்தப் பரிவான அணைப்பு, மனைவிக்கு கூடுதல் ஆறுதல் கொடுக்க.. கண்களில் தொக்கி நின்ற கண்ணீரையும் தாண்டி அவருக்கு ஒரு நிம்மதி வெளிப்பட்டது. இதுதான் என்னை ரொம்பவே ஈர்த்தது. எல்லாப் பெண்களுக்கும் தேவைப்படுவது இந்த சின்ன அன்பும், அரவணைப்பும்தான்.. பெண்களின் மனம் எதையும் அத்தனை சீக்கிரம் எதிர்பார்க்காது.. அது எதிர்பார்க்கும் ஒரே விஷயம், தோளோடு தோள் நிற்கும் நல்ல தோழமையும், அன்பும், சின்னதாக ஒரு பாராட்டும்.. அவ்வளவதேதான். இது கிடைக்காமல்தான் எத்தனை எத்தனை பெண்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் அந்தக்கணவன் கொடுத்த அந்த சின்ன அணைப்பு, அவரது மனைவிக்கு எத்தனை பெரிய நம்பிக்கையையும், ஆறுதலையும் கொடுத்திருக்கும் என்பது பெண்களுக்கு மட்டுமே புரியும்.. நான் இருக்கேன்டா.. எதுவும் ஆகாது.. தைரியமா இரு.. பார்த்துக்கலாம்.. என்ற நம்பிக்கை கிடைத்தால் இமயத்தையும் பிடித்து இழுத்து வந்து விடும் தைரியம் கிடைக்காதா என்ன!
ஒரு தந்தையாக மகனுக்கு "டேய் மகனே என்னை தாண்டி உனக்கு எதுவும் ஆகாது".. ஒரு மனைவியாக "பயம் எதற்கு என் செல்லமே.. நான் இருக்கின்றேன் உங்களுக்காக" என்றும் அந்தக் கணவன் உணர்த்திய விதம்.. ஆஹா.. சபாஷ்!
இதுபோன்ற ஆறுதலும், அணுசரனையும் கிடைக்கும் பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.. எல்லோருக்கும் இது கிடைப்பதில்லை. பல நேரங்களில் கணவர்கள் அன்புக்குப் பதில் எரிச்சலையும், ஒரு விதமான கோபத்தையும் தான் கக்குவார்கள். ஹாஸ்ப்பிட்டல் போகலாம் வாங்க என்று கூப்பிட்டால், நான் எதற்கு, நீயே போயேன் என்று அலுத்துக் கொள்ளும் கணவர்கள்தான் அதிகம். பிள்ளையை இப்படியா பார்த்துப்ப என்று கோபம் காட்டும் கணவர்கள்தான் அதிகம்.
{{comments.comment}}