பெரு கால்பந்து மைதானத்தில் நடந்த விபரீதம்.. மின்னல் வெட்டினால் என்ன செய்ய வேண்டும்.. தெரிஞ்சுக்கங்க!

Nov 05, 2024,11:09 AM IST

லிமா: பெருநாட்டில் நடந்த கால் பந்து போட்டியின் போது மைதானத்தில் மின்னல் தாக்கியதில் ஜோஸ் ஹக்யூ கோ டிலா குரூஸ் மூசா என்ற கால்பந்து வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பெரு நாட்டின் சில்கா மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஜுவன் டெட் பெல்லாவிஸ்டா மற்றும் ஃபேமிலியா சோக்கா ஆகிய இரு அணிகளுக்கு இடையே உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது. 22 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 2-0 என்ற புள்ளி கணக்கில் பெல்லாவிஸ்டா அணி முன்னிலை வகித்திருந்தது.




வீரர்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு பலமாக மின்னல் வெட்டியது. இதையடுத்து வீரர்கள் பெவிலியன் திரும்ப முடிவு செய்தனர். அப்போது வீரர்கள் மீது மின்னல் விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பல வீரர்கள் அப்படியே சரிந்து விழுந்தனர். அதில்,  39 வயதான ஜோஸ் ஹ்யூகோ டிலா குரூஸ் மோசா என்ற வீரர் உயிரிழந்தார். சம்பவ இடத்திலேயே சுருண்டு கீழே விழுந்து உயிரிழந்தார். மேலும் சக வீரர்கள் ஐந்து பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து காயமடைந்த வீரர்களை  மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


கால்பந்து போட்டியை காண வந்த சிலர் மின்னல் தாக்கி வீரர்கள் சட்டென்று சாய்ந்து விழும் காட்சியை வீடியோவாக பதிவேற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதுடன் பார்ப்போரை நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.


மின்னல் தாக்கினால் உயிர் போவது எப்படி.. மின்னல் வெட்டும்போது  என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்தவரான அறிவியல் பேராசிரியர் டிவி வெங்கடேஸ்வரன் சன் செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியின்போது கூறுகையில், மின்னலின் வேகம் ஒரு நொடிக்கு ஒரு லட்சத்து, 56 ஆயிரம் கிலோ மீட்டர் தான். ஆனால் அதன் தடிமன் 1 முதல் 2 அங்குலம் தான் இருக்கும். எனவே ஒருவரை மின்னல் தாக்கும் போது, அவருக்கு அருகில் இருப்பவரையும் தாக்கும் என்ற அவசியம் இல்லை.ஒரு பகுதியில் மின்னலின் தீவிரம் இன்னொரு பகுதியில் வேறு மாதிரியாக இருக்கும். 


மின்னல் வெட்டும்போது திறந்தவெளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும்.உலர்ந்த இடமாக தேடி அமர்வது நல்லது. ஏனெனில் அமரும்போது மின்னல் தரையில் தாக்குவதற்கான வாய்ப்பு சற்று குறைவு. அதேபோல் தண்ணீரோ ஈரமோ இல்லாத தரையில் நிற்க வேண்டும். கூரைக்கு கீழ் நிற்பது மிகவும் பாதுகாப்பானது எனக் கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, பீன்ஸ், பூண்டு எவ்வளவு தெரியுமா?

news

அதிரடியாக குறைந்து வரும் தங்கம்.. சவரனுக்கு ரூ.120 குறைவு.. அப்பாடா.. அப்ப கடைக்குப் போலாம்!

news

கந்தசஷ்டி .. நாளை 5ம் நாள் விழா.. இதை செய்தால் அப்பன் முருகனிடம் கேட்டது கிடைக்கும்!

news

கப்பு முக்கியம் பிகிலு.. கலங்கடிக்கும் விமர்சனங்களை.. லெப்ட் ஹேன்டில் டீல் செய்யும் தவெக + விஜய்!

news

பெரு கால்பந்து மைதானத்தில் நடந்த விபரீதம்.. மின்னல் வெட்டினால் என்ன செய்ய வேண்டும்.. தெரிஞ்சுக்கங்க!

news

CM MK Stalin visit: கோவையில் .. கள ஆய்வை இன்று தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்ருதி ஹாசன் ரேஞ்சுக்கு இறங்கி அடிக்கும் தேவதர்ஷினி மகள் நியதி.. கே.பி.ஒய் பாலாவுடன் கலக்கல்!

news

நவம்பர் 05 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மீன ராசிக்காரர்களே...உழைப்பால் உயர வேண்டிய நாள்

அதிகம் பார்க்கும் செய்திகள்