நாகப்பட்டனம்: நாகப்பட்டனத்தில் கட்டுவிரியன் பாம்பு கடித்து கோமா நிலைக்கு சென்ற 10 வயது சிறுவன், நாகை அரசு மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் பூரண குணமடைந்துள்ளார். அந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
கட்டு விரியன் பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கும். இந்த பாம்பு கடித்தவர்களின் தசை பகுதிகள் செயலற்றதாக்கி விடும் தன்மை கொண்டதாகும். இந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்தால் கிட்டதட்ட 1 மணி நேரத்தில் இறந்து விடுவார்களாம். மூச்சு மண்டலம் செயலிப்பதாலேயே பொதுவாக உயிர் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இத்தகைய கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்த 10 வயது சிறுவன் தற்பொழுது முழு உடல் நலத்துடன் மீண்டு அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார்.
நாகை மாவட்டம் மூகனூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது 10 வயது மகன் திவாகர். மே 18ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது சிறுவனின் கையில் கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு கடித்தது. இதில் சிறுவனின் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழந்தன. சிறுவனின் பெற்றோர்கள் சிறுவனை நாகையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினர் வென்டிலேட்டர் உதவியுடன் திவாகருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
தொடர்ந்து 7 நாட்களாக மருத்துவ குழுவினர் தீவாகருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், பூரண உடல் நலம் பெற்று சிறுவன் திவாகர் நேற்று வீடு திரும்பினார். அவனது பெற்றோர்கள் மருத்துவர்களுக்கு மனம் உறுகி நன்றி தெரிவித்தனர். கட்டு விரியன் பாம்பு கடித்து கோமா நிலைக்கு போய் தற்போது நல்ல நிலையில் உள்ள சிறுவனைப்பார்த்து மாரியப்பன் வீட்டின் அருகில் இருப்பவர்கள் வியந்து வருகின்றனர்.
பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
{{comments.comment}}