வங்கி கணக்கிற்கு இனி 4 பேர் வரை நாமினியாக நியமிக்கலாம் .. புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்

Dec 04, 2024,05:59 PM IST

டில்லி : ஒருவர் தனது வங்கி கணக்கிற்கு நாமினியாக முன்மொழியும் நபர்களின் எண்ணிக்கையை 4 பேர் வரை உயர்த்தும் புதிய வங்கி சட்ட மசோதாவிற்கு லோக்சபாவில் நேற்று (டிசம்பர் 03) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடரின் 7வது நாளான நேற்று, வங்கி நடைமுறை சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் தங்களின் வாரிசுதாரரை மாற்ற முடியாததால் கணக்குகள் முடங்குவதை தடுப்பதற்காக புதிய டெபாசிட் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரும் வகையில் சில மாற்றங்கள் கொண்டு வருவதற்காக இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 




இந்த புதிய சட்ட மசோதாவின் படி வங்கியில் பணம் டெபாசிட் செய்பவர் தங்களின் வாரிசுதாரராக ஒரே நேரத்திலோ அல்லது சிறிது காலத்திற்கு பிறகோ கூடுதலாக சிலரை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு பங்குதாரராகவோ அல்லது மொத்த பணத்திற்குமான வாரிசுதாரராகவோ நியமிக்க முடியும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 


மேலும் இந்த சட்ட மசோதா தாக்கலின் போது பேசிய நிர்மலா சீதாராமன், 2014ம் ஆண்டு முதல் வங்கி கணக்குகளில் நம்பத்தன்மையை காக்க வேண்டும் என்பதில் அரசும், மத்திய ரிசர்வ் வங்கியும் மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.


ஒழுங்குமுறை இணக்க பணிகளை முறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த பணிகளை ஒவ்வொரு 15 ம் தேதி மற்றும் மாதத்தில் கடைசி நாளிலும் செயல்படுத்தவும் இந்த புதிய சட்ட மசோதா வழி வகை செய்கிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்.. திடீரென கைது செய்யப்பட்டது ஏன்?.. திடுக்கிடும் தகவல்கள்!

news

Pushpa 2.. விஜய் ஷாருக்கானை முந்திய அல்லு அர்ஜூன்.. ஆத்தாடி புஷ்பா 2 சம்பளம் இவ்வளவா??!

news

சம்பல் செல்ல முயற்சித்த ராகுல் காந்தி.. தடை போட்ட உ.பி. போலீஸ்.. டெல்லிக்கே திரும்பினார்!

news

புயல் பாதித்த மாவட்டங்களில்.. ஜனவரிக்குத் தள்ளிப் போகும் அரையாண்டு தேர்வு.. அமைச்சர் அன்பில் மகேஷ்

news

வங்கி கணக்கிற்கு இனி 4 பேர் வரை நாமினியாக நியமிக்கலாம் .. புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்

news

மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகிறார் பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்.. டிச. 5ல் பதவியேற்பு

news

Chennai Lakes: தொடர் மழையால் மேம்பட்ட சென்னை ஏரிகளின் நீர் இருப்பு.. சூப்பர் அப்டேட்!

news

அவசர சோறு ஆபத்து.. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.. உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்!

news

Karthigai Maha Deepam 2024: கொடியேற்றத்துடன்.. திருவண்ணாமலையில் தொடங்கியது திருக்கார்த்திகை விழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்