தெற்கில் வென்ற காங்கிரஸ் தலைவர்கள்.. வரலாறை மாற்றி எழுதுவாரா மோடி?

Jan 27, 2023,02:25 PM IST
சென்னை: தென் மாநிலங்களைச் சேராத தேசிய தலைவர்கள் தெற்கில் போட்டியிட்டு வென்ற வரலாறு இதுவரை இந்திரா காந்தி குடும்பத்திடம் மட்டுமே உள்ளது. இந்த வரலாற்றை பிரதமர் நரேந்திர மோடி மாற்றி எழுதுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



தமிழ்நாட்டு மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை,அந்நியராக பார்க்கவில்லை மாறாக தங்களுக்குரியவராகவே பார்க்கிறார்கள். அவர் ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அவர் போட்டியிட வேண்டும் என்று மக்கள் ஆசைப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இந்த நிலையில் வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்க்கலாம்.

இந்திய அரசியலைப் பொறுத்தவரை குறிப்பாக தென் மாநிலங்களில் இதுவரை, தென் மாநிலங்களைச் சேராத தேசிய  தலைவர்கள் (காங்கிரஸ், பாஜகவிலிருந்து) யாரெல்லாம் போட்டியிட்டுள்ளார்கள் என்று பார்த்தால் இந்திரா காந்தி குடும்பத்தினர் மட்டுமே போட்டியிட்டுள்ளார்கள், வென்றுள்ளார்கள் என்று வரலாறு கூறுகிறது.

1978ம் ஆண்டு கர்நாடகத்தின் சிக்மகளூரு லோக்சபா தொகுதியில் இந்திரா காந்தி போட்டியிட்டார். அதேபோல 1980ம் ஆண்டு தேர்தலில் ஆந்திர மாநிலம்,  மேடக் தொகுதியில் அவர் போட்டியிட்டு வென்றார்.

இந்திரா காந்தியின் மருமகளும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி 1999ம் ஆண்டு  பெல்லாரி தொகுதியிலும், அமேதி தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார். பின்னர் பெல்லாரி தொகுதியை ராஜினாமா செய்து விட்டார்.

சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி தனது தாயார், பாட்டி வழியில் தென் மாநிலங்களில் போட்டியிட விரும்பி கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும், அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார். அதில் வயநாடு தொகுதியில் அபார வெற்றி பெற்றார். அமேதியில் தோல்வியைத் தழுவினார்.

காந்தி குடும்பத்தினர் தமிழ்நாட்டைத் தவிர மற்ற 3 தென் மாநிலங்களிலும் போட்டியிட்டு வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  அதேசமயம், பாஜகவைச் சேர்ந்த, தென் மாநிலங்களைச் சாராத எந்த தேசிய தலைவரும் இதுவரை தமிழ்நாட்டிலோ அல்லது பிற தென் மாநிலங்களிலோ போட்டியிட்டதில்லை.  இந்த முறை பிரதமர் நரேந்திர மோடி இந்த வரலாற்றை மாற்றி எழுதுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இருப்பினும் மூத்த தலைவர்களான அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும்  அத்வானியிடம் ஒரு சாதனை உள்ளது. வாஜ்பாய் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்தவர். ஆனால் குவாலியரில் அவர் ஒருமுறைதான் போட்டியிட்டு எம்.பி. ஆனார். மற்ற அனைத்து தேர்தல்களிலும் அவர் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லியில்தான் வென்றுள்ளார்.

மூத்த தலைவரான அத்வானி, தற்போதைய பாகிஸ்தானில் பிறந்தவர். அவர் குஜராத் மாநிலத்தில்தான் போட்டியிட்டு வென்று வந்தார். இந்த இரு பெரும் தலைவர்களும் தேசிய அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்களாக உள்ளனர். இருப்பினும் இவர்கள் தெற்கில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்��னவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கன்னியாகுமரியில் போட்டியிட வேண்டும் என்று ஒட்டுமொத்த காங்கிரஸாரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

news

'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்