பிரமாண்ட சென்டிரல் விஸ்டா.. கோலாலகல திறப்பு விழா.. புது நாடாளுமன்றத்தில் என்ன!

May 27, 2023,04:10 PM IST
டில்லி : டில்லியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் மே 28 ம் தேதியான நாளை திறக்கப்பட உள்ளது. 

பிரதமர் மோடி இந்த புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவை 20 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ள நிலையில் 25 அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள உள்ளன. 



மங்கல நிகழ்வுகளுடன் துவங்கப்பட உள்ள இந்த விழாவில் சைவ புரோகிதர்கள் பிரதமர் மோடியிடம் செங்கோலை ஒப்படைக்க உள்ளனர். இந்த செங்கோல் சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் புதிய பார்லிமென்ட்டின் உட்புறம் என்னவெல்லாம் சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை விளக்கும் வீடியோ ஒன்று மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், மாடர்ன் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கம், நூற்றுக்கணக்கான எம்.பி.,க்கள் அமரும் வகையிலான அறை என அனைத்தும் இடம்பெற்றுள்ளது. தாமரை, மயில், அரச மரம் ஆகிய மூன்று தேசிய சின்னங்களின் தீம்களும் இந்த பிரம்மாண்ட அரங்கில் இடம்பிடித்துள்ளன.  முக்கோண வடிவில், நான்கு அடுக்குகளைக் கொண்டதாக 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கு மூன்று நுழைவு வாயில்கள் உள்ளன. 



தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பார்லிமென்ட் கட்டிடம் 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். ஏறக்குறைய நூறு ஆண்டுகள் ஆகி விட்டது. புதிய பார்லிமென்ட் கட்டிடம் டாடா ப்ராஜெக்ட் லிமிடெட் நிறுவனத்தால் இந்தியாவின் ஜனநாயக மரபை வெளிப்படுத்தும் வகையிலான அமைப்புக்கள், எம்பி.,க்களுக்கான அறை, நூலகம், ஏராளமான கூட்டம் நடத்தும் அரங்குககள், சாப்பிடும் அறை, பிரம்மாண்ட பார்க்கிங் ஏரியா என அமைக்கப்பட்டுள்ளது.

புதிய பார்லிமென்ட் வீடியோவை பார்த்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, புதிய பார்லிமென்ட் கட்டிடம் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் விதமாக இருக்கும். இந்த தனித்துவமான கட்டிடத்தின் சிறப்பு அம்சங்களை இந்த வீடியோ எடுத்துக்காட்டி உள்ளது. இந்த வீடியோவை உங்களின் பக்கங்களில் பகிர்ந்து, உங்களின் கருத்துக்களை பகிரும் படி கேட்டுக் கொள்கிறேன். அதில் சிலவற்றை ரீ ட்வீட் செய்துள்ளேன்.  #MyParliamentMyPride என் ஹெஷ்டேக்கை பயன்படுத்த மறக்காதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு - நிகழ்ச்சி நிரல்

காலை 7.30 மணி: பூஜை நிகழ்ச்சி ஒரு மணி நேரம் நடைபெறும். காந்தி சிலை அருகே பந்தல் அமைக்கப்பட்டு அங்கு பூஜை நிகழ்வுகள் நடைபெறும். பிரதமர் நரேந்திர மோடி, லோகச்பா சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

8.30 மணி:  தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல், புதிய லோக்சபாவில் நிறுவப்படும் நிகழ்வு. 

9 மணி:  அனைத்து மத குருமார்கள் கலந்து கொள்ளும் பிரார்த்தனை கூட்டம். 

பிற்பகல் 12 மணி: தேசிய கீதத்துடன் 2வது கட்ட  திறப்பு விழா நிகழ்வுகள் தொடங்கும். 2 குறும்படங்கள் திரையிடப்படும். நாடாளுமன்றத்தின் வரலாறு, முக்கியத் தலைவர்களின் பேச்சுக்கள் இதில் இடம் பெறும்.



குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் வாழ்த்துச் செய்தியை, ராஜ்யசபா துணைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான ஜகதீப் தங்கர் வாசிப்பார். 

இதைத் தொடர்ந்து ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் உரை நிகழ்த்த அழைக்கப்படுவார். ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இருக்கிறார். அவரது கட்சி விழாவை புறக்கணிப்பதால் கார்கேவின் உரை இடம் பெற வாய்ப்பில்லை. அதைத் தொடர்ந்து லோக்சபா சபாநாயகர் உரை இடம் பெறும்.

புதிய நாடாளுமன்றத் திறப்பைத் தொடர்ந்து ரூ. 75 நாணயம் வெளியிடப்படும். பிரதமர் நரேந்திர மோடி அதை வெளியிட்டு சிறப்பிப்பார். அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்துவார். அத்துடன் விழா நிறைவுறும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்