அழகழகாக.. கிளாசியா சேலை கட்டணுமா.. இதைப் படிங்க சிஸ்டர்ஸ்!

Sep 19, 2023,04:42 PM IST

- மீனா


"சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு".. இது சினிமாப் பாட்டு.. நம்ம ஊர் பெண்களுக்கு அழகே அவர்கள் கட்டும் சேலைதான். சேலையில்தான் பெண்கள் ரொம்ப அழகாக இருப்பார்கள், பாந்தமாக இருப்பார்கள். அதில்  மாற்றுக் கருத்தே கிடையாது. 


மாடர்ன் மங்கைகளாக வலம் வரும் "2கே கிட்ஸ்" கூட சேலை காட்ட ஆசைப்படத்தான் செய்கிறார்கள். எல்லா பெண்களுக்குமே சேலை  கட்டுவது என்பது மிகவும் பிடித்த விஷயம் தான்.  விதம் விதமான சேலைகளை  கட்டி  அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைபடுவார்கள். ஆனால் எல்லாவிதமான  சேலைகளும் நமக்கு பொருத்தமாக இருக்குமா என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் சில பேருக்கு சாரி கட்ட ஆசையாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு எப்படி கட்ட வேண்டும் என்று தெரியாது.  




நாம் முன்னமே பார்த்தது போல  நம்முடைய பாடி மெசர்மென்டான சோல்டர், செஸ்ட், வெய்ஸ்ட், ஹிப்  இந்த நான்கு  அளவுகளை எடுத்து நாம் எந்த பாடி டைப்புக்குள் வருகிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த பாடி டைப்பிற்கு ஏற்ற மாதிரி  டிரஸ் மெட்டீரியல்களை நாம் எப்படி செலக்ட் செய்ய வேண்டும் என்று பார்த்தோம். இப்போது நம் பாடி ஷேப்பிற்கு ஏற்ற மெட்டீரியரில் உள்ள சேலையை   எப்படி கட்டினால் நல்லா இருக்கும் என்று தான் பார்க்க போகிறோம். 


அதிலும் சில பேருக்கு சந்தேகம் இருக்கும் எப்படி என்றால், பாடி ஷேப் எல்லாம் தெரிஞ்சிருச்சு .ஆனால் நான் உயரமா, ஒல்லியாகவும், இல்லை என்றால் குட்டையா கொஞ்சம் பேட்டாக உடல் அமைப்போடு இருக்கிறேனே,

நான் எப்படி சேலை கட்டினால் அழகாக தெரிவேன் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி நீங்களும் யோசிச்சு கொண்டு இருக்கிறீர்களா அப்போ இந்த கட்டுரை உங்களுக்குத்தான் .




பொதுவாக எல்லா விதமான பாடி டைப்புக்கும் ஏற்ற ஒரு டிரஸ் என்றால் அது சேலை தான். ஏனென்றால் நாம் ஒல்லியாக, அல்லது குண்டாக, உயரமாக அல்லது ஷார்ட்டாக இருந்தாலும் கூட சேலை கட்டும் விதத்தில் சிறிது மாற்றம் செய்தால், நம் குறையை மறைத்து அழகாக  வெளிப்படுத்த முடியும்.


பிளிட்டிங்:


எப்பவுமே  சேலை கட்டும் போது பிளிட்டிங் அழகா நீட்டாக எடுப்பது என்பது ரொம்ப ரொம்ப முக்கியமானது. பிளிட்டிங் சரியாக எடுக்கவில்லை என்றால் சேலையின் அழகையே கெடுத்து விடும். அதனால் மேல்  பிளிட்டிங் ஆனாலும் கீழ் பிளிட்டிங் ஆனாலும் சரியான விதத்தில் எடுப்பது மிகவும் முக்கியம். எல்லாருக்கும் ஒரே விதமாக எடுக்கக் கூடாது. ஷார்ட்டாக இருப்பவர்கள் சின்ன சின்னதாக  அதிகமான பிளீட் வரும்படி எடுத்து அதை பிளவுஸ் பின்னால் இறக்கி பின் வைத்து குத்திக்கொள்ள வேண்டும். 


சிங்கிள் பிளிட் எடுப்பதை தவிர்த்துக் கொள்ளவும். ஏனென்றால் சிங்கிள் பிளிட் நீங்கள் விடும்போது இன்னும் உங்களை ஷார்ட்டாக காண்பிக்ககூடும். ஆனால் ஒரு சில  சேலைக்கு சிங்கிள் பிளிட் வைக்க ஆசைப்பட்டீர்கள் என்றால், முந்தானை பகுதியை சிறியதாக விட்டு வைத்துக் கொள்ளலாம். எப்போ சேலை  கட்டுவதாக இருந்தாலும் ஹீல்ஸ் போட்டு சேலை கட்டுங்கள். ஏனென்றால் கொஞ்சமாவது ஹீல்ஸ் உள்ள ஸ்லிப்பர்ஸ் தான்  போடுவோம். அதனால் இப்படி செய்யும்போது சாரி பின்னால் தூக்கிக் கொள்ளும் சூழ்நிலை வராமல் தழைய தழைய சேலை கட்டும் லுக் வரும் போது அது இன்னும் உங்களை அழகாக காட்டும்.


லோயர் பிளிட் எடுக்கும் போது அகலமாக எடுத்து அதை அப்பர் வெய்ஸ்ட் பகுதியில் சொருகி கட்டும்போது உங்களை உயரம் அதிகமாக உள்ளது போல் காட்டும். அதனால் காட்டன் சாரீஸ் மற்ற எந்த சாரீஸ் ஆக இருந்தாலும் இறக்கமாக வைத்து கட்டும் போது உங்கள் உயரம் அதிகமாக இருப்பதுபோன்ற லுக் கொடுக்கும்.  உயரமாக இருப்பவர்கள் முந்தி பகுதியை நீளமாக விட்டு சிங்கிள் பிளிட் விடும் போது மிகவும் நன்றாக இருக்கும். ஆனால்  நிறைய  பிளிட் எடுத்து வைக்க ஆசைப்பட்டால் பிளிட் வைத்து பிளவுஸின் பின் பகுதியில் பின் குத்திய பிறகு பிளவுஸின் சிறிது முன் பகுதியில் முந்தானை பகுதியை சேர்த்து பின் குத்தினால் நன்றாக இருக்கும்.


லோயர் பிளிட் எடுக்கும்போது சின்ன சின்ன பிளிட் எடுத்து அதை ஒரே அளவில் சொருகாமல் சிறிது இடைவெளி விட்டு தள்ளி தள்ளி வைத்து பின் பண்ணி பிறகு சொருகினால் பார்ப்பதற்கு பிரில் போன்று அழகாக இருக்கும். சேலையில் பிளிட் எடுக்கும் போது அயர்ன் பண்ணி அல்லது ஸ்ட்ரெய்ட்னர் யூஸ் பண்ணி அயன் பண்ணி சேலை கட்டும்போது அதுவும் பார்க்க அழகாக இருக்கும். உயரமாக இருந்தாலும் ,உயரம் குறைவாக இருந்தாலும் லோயர் பிளிட் எடுக்கும் போது சைடு பார்டர் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி சைடு பகுதியை எடுத்து பின் குத்திய பிறகு லோயர் பிளிட்டை சொருக வேண்டும். இதனால் பார்க்கும் போது ஷேப்பாக ஸ்ட்ரக்சராக அழகாக தெரியும்.


இன்னும் அழகாக காட்ட வேண்டும் என்றால் ஷேப் வியர் பயன்படுத்தலாம். ஆனால் அதிக நேரத்திற்கு இதை பயன்படுத்த முடியாது. அதனால் மேலே சொன்ன மெத்தடில் நீங்கள் சேலை கட்டினால் நல்ல ஷேப் கிடைக்கும். ஒரு சாரியை அழகாக காட்டுவதில்  பிளவுஸ்க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. அதனால் ப்ளவுஸ் நல்லா பிட்டிங் ஆக ஸ்டிச் பண்ணி அணிய வேண்டும். அதிலும் கிராண்டான டிசைன்ஸ் தான் போட வேண்டும் என்று இல்லை.  சாரீஸ்க்கு ஏத்த மாதிரி பேட்ச் ஒர்க், டைப்பிங் ஒர்க் போன்ற சின்ன சின்ன டிசைன்ஸ் செய்து போட்டாலும் இன்னும் அந்த சாரிக்கு அதிகப்படியான  அழகு சேர்க்கும்.




சேலை சிம்பிளா இருக்கும் பட்சத்தில் பிளவுசை கொஞ்சம் கிராண்டாக தைத்துக் கொள்ளலாம். அதேபோல் சாரி கிராண்டாக இருக்கும் பட்சத்தில் ப்ளவுஸ்க்கு சிம்பிளான டிசைன் மட்டும் கொடுத்தால் போதுமானது. அதே போல் ப்ளவுஸ் வேறு வேறு அளவு கை வைத்து ஸ்டிட்ச் பண்ணி போட்டால்  நன்றாக இருக்கும். 


உதாரணத்திற்கு ஷார்ட் ஸ்லீவ், தான் எப்போதும் போடுவீர்கள் என்றால் அதற்கு மாறாக எல்போ லென்த் , 3/4லென்த், முழு லென்த் என்று இப்படி மாற்று மாற்றி மற்றும் ஸ்லீவுக்கு நெட் கிளாத் கொடுத்து கூட ஸ்டிட்ச் பண்ணி போடலாம்.  அதேபோல் பிளவுஸ் நெக் பகுதி கொஞ்சம் பிராடாக u நெக் அல்லது v நெக் , போட் நெக் வேற வேற டிசைன்ஸ் உள்ள போட் நெக்கும்  வைத்து போடலாம். இப்படி போடும்போது இன்னும் கிளாஸியா அழகா தெரிவீர்கள்.


என்ன சிஸ்டர்ஸ்.. கிளியர் ஆயிருச்சா.. என்ஜாய் சேலை கட்டிங்!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்