சென்னை : தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமா உலகிலேயே பலரையும் கவர்ந்த காதல் தம்பதிகள் என்றால் அது நம்ம நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தான். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு ஜூன் 09 ம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.
2022 ம் ஆண்டு உயிர், உலக் என இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகி விட்ட நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நேற்று (ஜூன் 09) தங்களின் முதலாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். இவர்களுக்கு அவர்களின் குட்டி மகன்கள் வாழ்த்து சொல்வது போன்ற ஒரு போஸ்ட் செம வைரலானது.
இந்நிலையில் தனது காதல் மனைவி நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அசத்திய வீடியோ ஒன்று வெளியாகி சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது. இவர்களின் திருமணநாள் பார்ட்டியில் குடும்பத்தினர், நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பார்ட்டி நடந்து கொண்டிருந்த போது திடீரென புல்லாங்குழல் கலைஞர் ஒருவர், நானும் ரெளடி தான் படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலான கண்ணான கண்ணே பாடலை இசைத்தபடி என்ட்ரி கொடுத்தார். கடைசியாக நான் பிழை பாடலை இசைத்து அவர் நிறைவு செய்தார். நானும் ரெளடி தான் படத்தில் இணைந்து பணியாற்றிய போது தான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்தது.
தங்களின் இனிமையான காதல் தருணங்களை நினைவுபடுத்தும் விதமாக அமைந்த அந்த பாடல்களை கேட்டதும் வெட்கப்பட்ட படி தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனை கட்டி அணைத்துக் கொண்டார் நயன்தாரா. நயனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதோடு விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள கேப்ஷனில், மிக எளிமையாக ஆனால் ஸ்பெஷலான தருணங்கள். எனது அன்பானவர்களுடன் எங்களின் முதல் திருமண நாளை கொண்டாடினோம் என குறிப்பிட்டு, தனது நண்பர்கள், இசைக் கலைஞர்கள் பலரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருந்தார்.
{{comments.comment}}