சென்னை : டைரக்டர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ள படம் விடுதலை. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள விடுதலை படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்தின் முதல் பாகம் மார்ச் 31 ம் தேதியான இன்று தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. சென்சார் போர்டு இந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகத்தில் வெளியிட்டுள்ளது. இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இன்று ரிலீசாகி உள்ள விடுதலையின் முதல் பாகம் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளதா? இல்லையா? என்பதை இங்கே பார்க்கலாம்.
வெற்றிமாறன் படம் என்றாலே தரமாக இருக்கும் என பெயர் உள்ளது. ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள அந்த நம்பிக்கையை மீண்டும் காப்பாற்றி உள்ளார் வெற்றிமாறன். ஒரு போலீஸ் பற்றிய கதையை மிக கச்சிதமாக எடுத்துள்ளார். சூரி கதையின் நாயகனாக தனது அர்ப்பணிப்பு கலந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். விஜய் சேதுபதியில் மற்றுமொரு அசத்தலான படம் என்றே சொல்லலாம். பவானி ஸ்ரீ, கிராமத்து பெண்ணாக அடக்கமாக வந்து ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார். இளையராஜாவின் இசையில் பாடல் அனைத்தும் சூப்பர்.
ஃபர்ஸ்ட் எப்படி இருக்கு? :
சூரி உள்ளிட்டோருக்கு அசத்தலான இன்ட்ரோ கொடுத்துள்ளார். கதையை வெற்றிமாறன் சொல்லி இருக்கும் முறை அற்புதம். இன்டர்வலுக்கு கொஞ்சம் முன்பு தான் விஜய் சேதுபதி வருகிறார். 15 நிமிடங்கள் மட்டுமே அவர் வரும் காட்சி அமைந்துள்ளது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட அந்த 15 நிமிட காட்சிகள் கைதட்டலை பெறுகிறது. விறுவிறுப்பை உணர்வை தருவதாக அமைந்துள்ளது ஃபர்ஸ்ட் ஆஃப்.
செகண்ட் ஆஃப் எப்படி இருக்கு ?
நல்ல திரைக்கதை. கொஞ்சமும் தொய்வு இல்லாமல் ஆரம்பம் முதல் கடைசி வரை கதையை நகர்த்தி சென்றுள்ளார். யாரும் எதிர்பாராத அட்டகாசமான க்ளைமாக்ஸ். சூரிக்கு வாழ்நாளில் கிடைக்காத ஒரு அற்புதமான வாய்ப்பினை வெற்றிமாறன் அளித்துள்ளார். வெற்றிமாறன் மீண்டும் ரசிகர்கள் மனதில் நின்றுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை கொஞ்சமும் ஏமாற்றமின்றி நிறைவேற்றி உள்ளார்.
படம் எப்படி இருக்கு ?
விடுதலை முதல் பாகம் கேரக்டர்கள் மற்றும் கதையின் இன்ட்ரோ மட்டுமே. மெயின் கதையே இரண்டாம் பாகத்தில் தான் வைத்துள்ளார் வெற்றிமாறன். பல சாதனைகளை இந்த படம் முறியடிக்கும் என்றே நம்பலாம். அப்பாவித்தனம் கலந்த, நேர்மையான போலீஸ் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி நடித்துள்ளார் சூரி. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் என்பதை தாண்டி கெட்ட வார்த்தைகள் அதிகம். அமெரிக்காவில் பீப் சவுண்ட் கூட இல்லாமல் இந்த காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதே போல் நிர்வாண காட்சிகள் பிளர் செய்து காட்டப்படும் காட்சிகளும் கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது. இதன் காரணமாகவே இந்த படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் அளித்துள்ளது. பல இடங்களில் கதை சொல்லப்பட்டுள்ள விதம் டாக்குமென்ட்ரி பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இளையராஜாவின் மனதை வருடும் இசையுடனான பாடல்கள் படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ். பார்க்கலாம்.
படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தின் டிரைலர் திரையிடப்படுகிறது. படத்தின் கதையே அதில் தான் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை இப்போதே கிளப்பி உள்ளார் வெற்றிமாறன்.
{{comments.comment}}