Varisu trailer review : என்னடா வாரிசுன்னு டைட்டில் வச்சுட்டு சூரியவம்சத்தை உல்டா பண்ணிருக்கீங்க

Jan 04, 2023,06:42 PM IST

தெலுங்கு சினிமாவின் முன்னணி டைரக்டர்களில் ஒருவரான வம்சி பைடபள்ளியின் இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் வாரிசு. தமிழில் வாரிசு என்ற பெயரிலும், தெலுங்கில் வாருசுடு என்ற பெயரிலும் பைலிங்குவல் படமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீசிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.


ஏற்கனவே படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி மாஸ் ஹிட் அடித்துள்ள நிலையில் இன்று வாரிசு படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே இது அந்த படத்தின் காப்பி, இந்த படத்தின் காப்பி என்ற சர்ச்சை இருந்து வருகிறது. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி விஜய் ரசிகர்கள் வழக்கம் போல் இந்த படத்தையும் ஹிட் ஆக்க தயாராகி வருகின்றனர். இதன் ஆரம்பமாக வாரிசு டிரைலர் வெளியான ஒரு மணி நேரத்திலேயே யூட்யூப்பில் 4 மில்லியனுக்கும் அதிகமாக பார்வைகளை பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.




படம் சென்டிமென்ட் கலந்த ஆக்ஷன் கதை என ஏற்கனவே சொல்லி விட்டார்கள். அது டிரைலரிலும் இடம்பெற்றுள்ளது. டிரைலரின் ஆரம்பமே, "வீடுங்கறது கல், மணல் தான். ஆனா குடும்பம் அப்படி கிடையாது" என பேக்கிரவுண்டில் டயலாக் ஒலிக்க, பிரம்மாண்ட பங்களா காட்டப்படுகிறது. அப்பா சரத்குமார், அம்மா ஜெயசுதா, அண்ணன்கள் ஸ்ரீகாந்த், ஷ்யாம் என இன்ட்ரோ கொடுக்கிறார்கள். மூன்றாவது மகனான ஹீரோ விஜய்யை வெறுக்கும் அப்பா சரத்குமார். அப்படியே சூரியவம்சம் படம் பார்க்குற ஃபீல் வருது. 

ஹீரோ குடும்பத்தை எதிர்க்கிற பிரகாஷ்ராஜ், அப்பாவின் பிசினசை காப்பாற்ற வரும் விஜய் தொடங்கி எல்லாமே சூரிய வம்சம் படத்தை மாடர்ன் வெர்சனில் பார்ப்பது போல் உள்ளது. டைரக்டர் வம்சி பைடபள்ளி தெலுங்கு பட மூடிலேயே படத்தை எடுத்திருப்பார் போல, கொடூரமா அடிக்கிற சண்டைக்காட்சி, ஓவர் குடும்ப சென்டிமென்ட்டை பிளிந்து எடுக்கும் டப் செய்யப்பட்டது போன்ற டயலாக், செட் போடப்பட்டதை அப்பட்டமாக காட்டும் லொகேஷன் எல்லாமே தெலுங்கு படம் பார்க்குற போலவே இருக்கு.

வழக்கம் போல இந்த படத்திலும் ஹீரோயின் ராஷ்மிகா டூயட், ரொமான்சுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளார் போல. வா தலைவா பாட்டில் பேக்கிரவுண்டில் தூவப்படும் கலர் பொடிகள், ரஞ்சிதமே பாட்டில் காட்டப்டும் ரெட் ஷேடிங் எஃபெக்ட் எல்லாமே விஜய் நடிப்பில் தெலுங்கு படம் பார்ப்பது போலவே இருக்கு. யோகிபாபு காமெடி என்ற பெயரில் ஏதோ டிரை பண்ணிருக்கார் போல. விஜய்யை வைத்தே அவர் நடித்த பூவே உனக்காக படத்தின் க்ளைமாக்சில் வரும் பூ - செடி டயலாக்கை கலாய்த்திருப்பது நன்றாகவே உள்ளது.

சரத்குமார் வெப்சீரில் நடிக்கும் மூடிலும், வில்லன் பிரகாஜ் ராஜ் தெலுங்கு படத்தில் நடிக்கும் மூடிலும் நடித்திருக்கிறார்கள் போல. மாஸ் காட்ட வேண்டும் என்பதற்காக கேஜிஎஃப் குவாரியை வேறு காட்டுகிறார்கள். டிரைலர் மட்டும் தான் தெலுங்கு படம் மாதிரி இருக்கா அல்லது ஒட்டு மொத்த படமே தெலுங்கு டப்பிங் பார்க்குற போல தான் இருக்குமா என தெரியவில்லை. பாட்டு, பேக்கிரவுண்ட் மியூசிக் என இரண்டிலும் பட்டையை கிளப்பி உள்ளார் தமன். 

வாரிசு  ஃபர்ட் மற்றும் செகண்ட் லுக்கை பார்த்து விட்டு கபாலி பட காப்பி, சந்திரமுகி காப்பி என்றார்கள். ஆனால் டிரைலரை பார்த்தால் சூரியவம்சம் பார்க்குற மாதிரி இருக்கு. படம் எப்படி இருக்கும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

ஸ்ரீ ராம நவமி.. ராம பிரானின் அவதார தினம்.. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்