நீங்க அரசியல் பண்ண விஜய் டிவி தான் கிடச்சதா?...கமலை விட்டு விளாசும் வனிதா விஜயக்குமார்

Jan 19, 2023,03:29 PM IST
சென்னை: உங்களது அரசியலுக்கு விஜய் டிவிதான் கிடைத்ததா என்று நடிகர் கமல்ஹாசனை கேட்டுள்ளார் நடிகை வனிதா விஜயக்குமார்.



தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, உச்ச நடிகராக வளர்ந்தவர் கமல்ஹாசன். 2018 ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் துவங்கி நடத்தி வருகிறார். இந்தியன் 2 ஷூட்டிங் ஒரு பக்கம், அரசியல் வேலைகள் ஒரு பக்கம் என பிஸியாக இருக்கும் கமல், விஜய் டிவி.,யில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

முதல் ஐந்து சீசன்களை தொடர்ந்து, ஓடிடி வெர்சனான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் சில வாரங்கள் தொகுத்து வழங்கினார். பிறகு அதிலிருந்து விலகி, விக்ரம் படத்தில் மும்முரமாக நடித்து வந்தார். தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி கிட்டதட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இறுதி போட்டியாளர்களாக 6 பேர் உள்ளனர்.

இறுதி போட்டியாளர்களின் அரசியல் பிரமுகரான விக்ரமனும் ஒருவர். கடந்த வார இறுதி எபிசோட்களை தொகுத்து வழங்கி கமல், விக்ரமனுக்கு ஆதரவாக மறைமுகமாக அவருக்கு ஓட்டளிக்கும் படி பேசினார். இதனால் நடிகையும், பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான வனிதா விஜயக்குமார் ட்விட்டரில் தொந்தளித்து கமலுக்கு எதிராக தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதற்கு சோஷியல் மீடியா பயனாளர்கள் பலர் ஆதரவும், எதிர்ப்பும் கலந்த கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

வனிதா விஜயக்குமார் தனது ட்விட்டர் பதிவில், ரியாலிட்டி ஷோவில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்துவது சரியல்ல. சாமானியர்களும் கலந்து கொள்ளும் ஒரு ஷோவில் இது கொஞ்சமும் நியாயமற்றது. ஒரு தலைவர் தனது கட்சியை சேர்ந்த ஒருவருக்கு ஓட்டளிக்க சொல்ல கேட்பது கொஞ்சமும் சரியல்ல. ஒரு பொழுதுபோக்கு தளத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். அரசியல் காரணத்திற்காக கமல் தனது கட்சியை சேர்ந்தவருக்கு ஓட்டளிக்க சொல்லி கேட்டுள்ளார்.

சினேகனுக்கும் அவரது கட்சி ட்விட்டரில் ஆதரவாக செயல்பட்டது. விக்ரமன் வெற்றி பெற்றால் அது அரசியல் மற்றும் தான் சார்ந்த சமூகத்தின் ஆதரவால் தான் இருக்கும். பார்க்கும் பார்வையாளர்களின் ஆதரவால் இருக்காது என குறிப்பிட்டுள்ளார். இதே போல் விக்ரமனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கும் வனிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை வைத்து ட்விட்டரில் வனிதாவிற்கும், ட்விட்டர் பயனாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமே நடந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Tvk மாநாடு 2024: தோழர்களே டூவீலர் வேண்டாம்.. உங்க நல்லதுக்கு சொல்றேன்.. விஜய் கோரிக்கை

news

Tamilnadu Rains: 9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருக்காம்.. மதுரையிலும் பெய்யுமாம்!

news

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு.. இவங்கெல்லாம் பாதயாத்திரை வர வேண்டாம்.. தேவஸ்தானம் கோரிக்கை!

news

54 வருடங்களில் இல்லாத கனமழை.. தூக்கம் தொலைத்த தூங்கா நகரம் மதுரை.. முதல்வர் பிறப்பித்த உத்தரவு!

news

சேலம்னா மாம்பழம் மட்டும்தானா.. சுவையான அவல் சுண்டல்.. அதை விட ஸ்பெஷல்ங்க!

news

அக்டோபர் 26 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

தனுசு ராசிக்காரர்களே... அலைச்சல் அதிகரிக்கும் நாள்

news

Deepavali Special Story: இப்பெல்லாம் யாருங்க துணி எடுத்து தைக்கிறாங்க.. நலிவடையும் சிறு டெய்லர்கள்!

news

உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.. எல். முருகன் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்