டெல்லி: வந்தே பாரத் ரயில்களின் அடுத்த வெர்ஷனை இந்திய ரயில்வே அறிமுகம் செய்யவுள்ளது. இந்த முறை, வந்தே சாதாரண் என்ற பெயரில் இந்த ரயில்கள் அறிமுகமாகின்றன. இவை முழுக்க முழுக்க "நான் ஏசி" பெட்டிகளைக் கொண்டவை ஆகும்.
இந்தியாவின் அதி வேக ரயிலாக அறிமுகமானவைதான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இடையே தற்போது 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்டவை. பல்வேறு அதி நவீன வசதிகளுடன் கூடியவை. குறைந்த நேரத்தில் அதிக தொலைவில் உள்ள நகரங்களை சென்றடைய முடிவதால் மக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளன.
வந்தே பாரத் ரயில்களில் உள்ள ஒரே குறை. இவற்றில் கட்டணம் அதிகமாக இருப்பதுதான். இந்தக் குறையைத் தீர்க்க தற்போது ரயில்வே புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. சாமானிய மக்களும் எளிதாக வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் வகையில் வந்தே சாதாரண் என்ற பெயரில் புதிய ரயிலை அது அறிமுகப்படுத்தவுள்ளது.
வந்தே பாரத் ரயில் போன்றதுதான் இதுவும். ஆனால் ஏசி மட்டும் இருக்காது. மற்றபடி தற்போது அனைத்து வசதிகள், வேகம் ஆகியவற்றில் எந்தக் குறைவும் இருக்காதாம். வந்தே சாதாரண் எக்ஸ்பிரஸ் ரயில்களின் என்ஜின்களும், வந்தே பாரத்தில் பயன்படுத்தப்படும் அதே என்ஜின்களாகத்தான் இருக்குமாம். மேலும் வந்தே சாதாரண் பெட்டிகளை சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் கோச்சில் தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இங்குதான் வந்தே பாரத் பெட்டிகளும் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதியில் முதல் வந்தே சாதாரண் ரயில் அறிமுகமாகும் என்றும் தெரிகிறது.
வந்தே சாதாரண் ரயிலில் மொத்தம் 24 பெட்டிகள் இருக்குமாம். இதில் முன்னும், பின்னும் இரண்டு என்ஜின்கள் பொருத்தப்பட்ட பெட்டிகள் இருக்கும். வந்தே பாரத் ரயில்களில் தற்போது உள்ளது போல தானியங்கிக் கதவுகள், பயோ டாய்லெட்டுகள், பயணிகளுக்கான தகவல் தொடர்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் இருக்கும். சிசிடிவி கேமராக்களும் ரயிலில் பொருத்தப்பட்டிருக்கும். ஏசி கிடையாது என்பதால் கட்டணமும் குறைவாகவே இருக்கும். எனவே அனைத்துத் தரப்பு மக்களும் இதில் எளிதாக பயணிக்க முடியும்.
தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை உயர்வு... காலையில் ரூ. 520... மாலையில் ரூ.960 உயர்வு
உலகமே எதிர்பார்க்கும் அஜித்தின் குட் பேட் அக்லி நாளை வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
திருச்சி மாவட்டத்திற்கு ஏப்., 15ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர்
மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?
குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!
நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!
இரத்தக்களறி (சிறுகதை)
{{comments.comment}}