சென்னை: சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல் அன்ட் டி கப்பல் தளத்திற்கு அமெரிக்க கடற்படையின் கப்பலான சால்வர் பழுது பார்க்கும் பணிக்காக வந்து சேர்ந்துள்ளது.
அமெரிக்கா மற்றம் இந்திய கடற்படைகள் இடையே, பழுது மற்றும் பராமரிப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் கப்பல் பழுதுபார்க்கும் சிறப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்க கடற்படை லார்சன் அண்டு டூப்ரோவுடன் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ் சால்வர் காட்டுப்பள்ளி கப்பல் தளத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்க கடற்படையின், மிலிட்டரி சீலிஃப்ட் கமாண்டின் மீட்புப் பணிகள் கப்பல் யுஎஸ்என்எஸ் சால்வர் ஜூலை 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, காட்டுப்பள்ளி எல் அண்ட் டி கப்பல் தளத்திற்கு வந்தடைந்தது.
லார்சன் & டூப்ரோ லிமிடெட் கப்பல் தளத்திற்கு வந்தடைந்தது. ஏற்கனவே யுஎஸ்என்எஸ் சார்லஸ் ட்ரூ மற்றும் யுஎஸ்என்எஸ் மேத்யூ பெர்ரி ஆகிய கப்பல்கள் இங்கு பழுது பார்ப்பிற்காக வந்துள்ளன. தற்போது 3வது கப்பலாக சால்வர் வந்துள்ளது.
காட்டுப்பள்ளி கப்பல் தளத்தில், சால்வர் கப்பலுக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க கடற்படை மற்றும் எல்&டி இடையே ஐந்தாண்டு கப்பல் பழுதுபார்க்கும் சிறப்பு ஒப்பந்தம் (MSRA) கையெழுத்தான பிறகு வந்த முதல் கப்பல் சால்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத் தலைவர் கேப்டன் மைக்கேல் எல். ஃபார்மர், எல்&டி டிஃபென்ஸ் வர்த்தகப் பிரிவின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் தலைவர் ஏ.டி. ராம்சந்தனி, அமெரிக்க தூதரகம் மற்றும் எல் அண்ட் டி நிறுவன மூத்த அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.
சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின் கூறியதாவது: "தொடர்ந்து விரிவடைந்து வரும் அமெரிக்கா-இந்தியா கூட்டுறவில் மற்றொரு மைல்கல்லாக இந்த ஒப்பந்தம் திகழ்கிறது. 2022-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க-இந்திய 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையின் நேரடி விளைவாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் அமைந்துள்ளது. காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தின் பழுதுபார்க்கும் வசதிகளை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டையும் இது வெளிப்படுத்துகிறது. நமது இரு நாடுகளின் மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்தவும், சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் பகுதிக்கு பங்களிக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும்" என்றார்.
யுஎஸ்என்எஸ் சால்வர் கப்பலை பற்றிய தகவல்கள்
கப்பலின் முழு பெயர்
மிலிட்டரி சீலிஃப்ட் கமாண்டின் (MSC) மீட்புப் பணிகள் கப்பல் யுஎஸ்என்எஸ் சால்வர் (டி-ஏஆர்எஸ் 52)
கப்பலின் பணி
கடலில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவு அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
என்ன வகையான ஆதரவு
மீட்பு, இழுத்து செல்லுதல், கடலோர தீயணைப்பு, கனரகப் பொருட்களை தூக்குதல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு பணிகளை சால்வர் மேற்கொள்கிறது.
உரிமை மற்றும் செயல்பாடு
அமெரிக்க அரசுக்கு சொந்தமான யுஎஸ்என்எஸ் சால்வர் எம்எஸ்சி வசம் உள்ள இரண்டு மீட்புப் பணிக் கப்பல்களில் ஒன்றாகும் மற்றும் தூர கிழக்குப் பகுதியில் உள்ள இவ்வகையிலான ஒரே கப்பலாகும்.
யுஎஸ்என்எஸ் சால்வோரின் கட்டுமானம், அதன் வேகம் மற்றும் உறுதித்தன்மை, உலகம் முழுவதும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு மிகவும் ஏற்றதாக இக்கப்பலை ஆக்குகிறது. அமெரிக்க கடற்படையின் காம்பாட் லாஜிஸ்டிக்ஸ் ஆதரவுப் படையின் ஒரு அங்கமாக இது செயல்பட்டு, கடலில் உள்ள கடற்படைக்கு மீட்பு சேவைகளை வழங்குகிறது.
கப்பலின் முக்கிய அம்சங்கள்
நீளம்: 255 அடி
அகலம்: 51 அடி
எடை: 3,336 டன்
வேகம்: 14 நாட்ஸ்
பணியாளர்கள்: 26
பாதுகாப்பு படையினர்: 4
கூடுதல் 48 (அதிகபட்சம்)
{{comments.comment}}