55 வயதிலும் அழகு தேவதையாக ஜொலிக்கும் மாதுரி தீட்சித்..  அழகு ரகசியம் இது தானாம்!

Mar 27, 2023,04:11 PM IST
மும்பை : 1980 களில் பாலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் மாதுரி தீட்ஷித். அனைத்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார்.

55 வயதாகும் மாதுரி தீட்ஷித், தற்போதுள்ள இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொள்வது, போட்டோஷூட் நடத்துவது என பாலிவுட்டையே கலக்கி வருகிறார். இந்த வயதிலும் இவர் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார் என கேட்காதவர்களே கிடையாது. மாதுரியின் அழகின் ரகசியம் இது தான். 

தோல் பராமரிப்பு :

மாதுரி தனது உடலில் தோலின் அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர். இதற்காக கண்டிப்பாக பலவற்றையும் பின்பற்றி வருகிறார். தோலிவை அடிக்கடி சுத்தம் செய்வது, ஈரபதத்துடன் வைத்துக் கொள்வது என பார்த்துக் கொள்வார்.



மேக் அப் கூடாது :

தூங்க செல்வதற்கு முன் அனைத்து மேக் அப்களையும் கண்டிப்பாக நீக்கி விட்டு, முகம், உடல் அனைத்தையும் சுத்தம் செய்த பிறகே படுக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

நீர்சத்து :

உடல் எப்போதும் நீர்சத்துடன் இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பார். இதற்காக தினமும் அதிகப்படியான தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பார். அதோடு நீர்சத்துள்ள பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வார்.

யோகா :

யோகா கற்றுக் கொள்வது, அதை தொடர்ந்து பயிற்சி செய்வது என்றால் மாதுரிக்கு மிகவும் பிடிக்கும். அவர் அழகான உடல் அமைப்பை கொண்டிருப்பதற்கு மட்டுமல்ல மனமும் அமைதியாக இருப்பதற்கு யோகா பெரிதும் உதவுகிறது. இது அவரது ஒட்டுமொத்த அழகிற்கும் பெரிதும் துணை நிற்கிறது.

கூந்தல் பராமரிப்பு :

மாதுரியின் கூந்தல் எப்போதும் அடர்த்தியாகவும் பட்டுப் போல் மினுமினுப்பாகவும் இருக்கும். இதற்கு இயற்கையான பொருட்களை மட்டுமே அவர் கூந்தலுக்கு பயன்படுத்துவது தான் காரணம். கூந்தல் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்துவார். கூந்தல் உடைந்து போகாமல் இருப்பதற்காக அதிக வெப்பம், தூசு ஆகியவை படாமல் பார்த்துக் கொள்வார்.

குறைவான மேக் அப் :

மாதுரி மிகவும் குறைந்த அளவிலான மேக் அப்பை மட்டுமே போட்டுக் கொள்வார். இயற்கையான அழகு பளிச்சிட வேண்டும் என்பதால் அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் மேக் அப் குறைவாக பயன்படுத்த வேண்டும் என தான் நடிக்கும் பட டைரக்டர்களின் கேட்டுக் கொள்வாராம்.

நம்பிக்கை :

எப்போதும் பாசிடிவ்வான எண்ணங்கள், தன்னம்பிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார் மாதுரி. இதுவும் கூட அவரது அழகிற்கு, இளமைக்கும் முக்கிய காரணமாகும்.

வீட்டு உபயோகப் பொருட்கள் :

தனது அழகை பராமரிக்க அவரது வீட்டு சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவார். அழகு சாதனப் பெருட்களை அவர் தேடுவதில்லை.

ஓட்ஸ் ஃபேஸ்பேக் :

முகம் பளிச்செனவும், மினு மினுப்பாகவும் இருப்பதற்கு அடிக்கடி ஓட்ஸ் கொண்ட  ஃபேஸ்பேக் போட்டுக் கொள்வது மாதுரி தீட்சித்தின் பழக்கம். 

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்