விடாமுயற்சியில் த்ரிஷா அவுட்...அஜித்திற்கு ஜோடி இவரா?

Jul 31, 2023,03:25 PM IST

சென்னை : அஜித்தின் விடாமுயற்சி படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது அவருக்கு பதில் வேறு ஒரு டாப் ஹீரோயினிடம், அஜித்திற்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

துணிவு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு, அடுத்ததாக தனது 62 வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் அஜித். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். விடாமுயற்சி என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கு எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.



இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் 3வது வாரத்தில் துவங்கப்பட உள்ளதாம். இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணி நடந்து வருகிறதாம். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அது உண்மையில்லை என சொல்லப்படுகிறது. 

விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க நடிகை தமன்னாவிடம் பேசப்பட்டு வருகிறதாம். ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா போட்ட செம்ம ஆட்டத்தால் அந்த பாடல் செம டிரெண்டாகி விட்டது. அதோடு தற்போது தமன்னா தான் தற்போது டிரெண்டிங்கிலும் இருக்கும் நடிகையாகி விட்டார். இதனால் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அவரை நடிக்க வைக்க படக்குழு கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறதாம்.

ஒருவேளை விடாமுயற்சி படத்தில் நடிக்க தமன்னா ஓகே சொல்லும் பட்சத்தில், கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற உள்ளார். இதற்கு முன் வீரம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்