2023 ம் ஆண்டு புறப்பட்டு 2022 ம் ஆண்டில் தரையிறங்கிய விமானம்.. ஹே எப்புர்றா!?

Jan 02, 2023,04:56 PM IST
சியோல் : சியோலில் இருந்து 2023 ம் ஆண்டு துவக்கத்தில் புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று அமெரிக்காவில் 2022 ம் ஆண்டில் தரையிறங்கி உள்ளது. இது டைம் மெஷின் கதை இல்லை. நிஜமாக நடந்துள்ளது. 

இது எப்படி சாத்தியம்? அது எப்படி நேரத்தில் பின்னோக்கி செல்ல முடியும்? என்ற கேள்விக்கு அறிவியல் ரீதியாக கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் விளங்கும். 

யுனைடெட் ஏர்லைன்ஸ் போயிங் 777-300 ரக விமானம் தென்கொரியாவின் சியோல் நகரில் இருந்து
2023 ம் ஆண்டு ஜனவரி 1 ம் தேதி 00.29 (நம்ம ஊர் நேரத்தில் நள்ளிரவு 12.29) மணிக்கு புறப்பட்டுள்ளது. இன்சியான் விமான நிலையத்தில் புறப்பட்ட இந்த விமானம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ
நகரில் 2022 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி மாலை 05. 01 மணிக்கு தரையிறங்கி உள்ளது. 



ஆசிய கண்டத்தில் இருந்து சர்வதேச டேட் லைனை கடந்து,  மற்றொரு நேர மண்டலத்திற்குள் விமானம் பயணித்ததால் பின்னோக்கிய இந்த பயணம் சாத்தியமாகி உள்ளது. ஆசியாவில் இருந்து அமெரிக்க கண்டத்திற்கு செல்லும் வழியில், புதிதாக பிறந்த 2023ம் ஆண்டில்  இரண்டு மணி நேரம் 13 நிமிடங்கள் விமானம் பயணித்துள்ளது. 

அதன் பிறகு சர்வதேச நேர மண்டலத்தைக் கடந்து, 180 டிகிரி க்ரீன்விச் மெரிடியன் நோக்கி விமானம் பறந்தபோது, அது 2022 ம் ஆண்டிற்குப் போய் விட்டது. மொத்தமாக ஒன்பது மணி நேரம் 46 நிமிடங்கள் இந்த விமானம் பின்னோக்கிய காலத்தில் பயணித்துள்ளது. விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. லைக்கள், கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. இயற்பியல் ரீதியிலான இந்த நேர அளவீடு மற்றும் மாறுபாடு புரியாததால் இந்த நம்ப முடியாமல் பலர் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.

சர்வதேச அளவிலான நேரங்கள், பசிபிக் பண்டலத்தை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுவதால் இந்த "டைம் டிராவல்" சாத்தியமாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்