சென்னை: தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் முன்பு தனியார்கள்வசம்தான் மது விற்பனை இருந்தது. ஆனால் ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் அனைத்துக் கடைகளையும் அரசு தன் வசப்படுத்தி டாஸ்மாக் நிறுவனத்திடம் மது விற்பனையை ஒப்படைத்தது. அது முதல் தமிழ்நாடு அரசே டாஸ்மாக் மூலமாக மது விற்பனையை நடத்தி வருகிறது.
பல ஆயிரம் கோடி ரூபாய் வரும் மிகப் பெரிய பிசினஸாக டாஸ்மாக் மது விற்பனை உள்ளது. இது தமிழ்நாடு அரசுக்குப் பெரும் வருவாயாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் வசம் மதுக் கடைகள் வந்த பின்னர், தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் மதுப் பழக்கம் விரிவடைந்து விட்டதாகவும், இதனால் பெண்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோரால் பெருமளவில் விபத்துகள் நடப்பதாகவும், குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டதாகவும், இளம் வயது மரணங்கள் அதிகரித்து விட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளன. மதுக் கடைகளை முழுமையாக மூடி தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும், மக்களும் கூட கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் 500 மதுக் கடைகள் மூடப்படும் என்று கடந்த பட்ஜெட்டின்போது மது விலக்குத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது மது விலக்கு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அறிவித்தார். இந்தக் கடைகள் எவை என்பது குறித்து ஆய்வு நடத்தி அவை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தக் கடைகளை மூடுவது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டு இன்று முதல் இவை மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூடப்படும் கடைகள் எவை என்ற பட்டியல் அடுத்து வெளியிடப்படும்.
மாவட்ட வாரியாக எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை கடைகள் மூடப்படுகின்றன என்ற பட்டியலை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியல் இதோ:
சென்னை வடக்கு - (மொத்த கடைகள் 100) - மூடப்படும் கடைகள் 2)
சென்னை மத்தி - மொத்தம் 93, மூடல் 20
சென்னை தெற்கு - மொத்தம் 102, மூடல் 21
காஞ்சிபுரம் வடக்கு - மொத்தம் 1146, மூடல் 15
காஞ்சிபுரம் தெற்கு - மொத்தம் 109, மூடல் 16
திருவள்ளூர் கிழக்கு - மொத்தம் 217 - மூடல் 32
திருவள்ளூர் மேற்கு - மொத்தம் 138 - மூடல் 14
கோயம்புத்தூர் வடக்கு - மொத்தம் 166, மூடல் 10.
கோயம்புத்தூர் தெற்கு - மொத்தம் 139, மூடல் 10
திருப்பூர் - மொத்தம் 251, மூடல் 24
ஈரோடு - மொத்தம் 207, மூடல் 24
நீலகிரி - மொத்தம் 76, மூடல் 3.
கரூர் - மொத்தம் 94, மூடல் 7
மதுரை வடக்கு - மொத்தம் 108, மூடல் 9
மதுரை தெற்கு - மொத்தம் 147, மூடல் 12
திண்டுக்கல் - மொத்தம் 159, ம்ூடல் 15
சிவகங்கை - மொத்தம் 127, மூடல் 14
ராமநாதபுரம் - மொத்தம் 119, மூடல் 8
விருதுநகர் - மொத்தம் 185, மூடல் 17
திருநெல்வேலி - மொத்தம் 160, மூடல் 13
தூத்துக்குடி - மொத்தம் 140, மூடல் 16
கன்னியாகுமரி - மொத்தம் 110, மூடல் 12
தேனி - மொத்தம் 90, மூடல் 9
சேலம் - மொத்தம் 211 , மூடல் 17
தர்மபுரி - மொத்தம் 68, மூடல் 4
கிருஷ்ணகிரி - மொத்தம் 119, மூடல் 2
நாமக்கல் - மொத்தம் 187, மூடல் 18
வேலூர் - மொத்தம் 114, மூடல் 8
திருவண்ணாமலை - மொத்தம் 215, மூடல் 8
அரக்கோணம் - மொத்தம் 87, மூடல் 2
திருச்சிராப்பள்ளி - மொத்தம் 177, மூடல் 16
நாகப்பட்டனம் - மொத்தம் 99, மூடல் 7
தஞ்சாவூர் - மொத்தம் 160, மூடல் 15
புதுக்கோட்டை - மொத்தம் 144, மூடல் 12
கடலூர் - மொத்தம் 145, மூடல் 1
திருவாரூர் - மொத்தம் 111, மூடல் 1
விழுப்புரம் - மொத்தம் 220, மூடல் 21
பெரம்பலூர் - மொத்தம் 89, மூடல் 8
இந்த உத்தரவுக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் மொத்தம் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 5329 ஆக இருக்கும்.
LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!
சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!
வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!
மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!
{{comments.comment}}