கர்நாடக முதல்வர் யார்?... தொடரும் சஸ்பென்ஸ்... இதுதான் காங்கிரஸோட பிரச்சனையே!

May 17, 2023,02:22 PM IST

பெங்களுரு : காங்கிரஸ் கட்சி இன்னும் தனது கர்நாடக முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது தேசிய அளவில் கேலிக்கூத்தாக மாறியுள்ளது. இத்தனை பெரிய வெற்றி பெற்றும் கூட முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாத அளவுக்கு குழப்பமா என்று பலரும் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர்.


கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக.,வை எதிர்த்து போராடி ஒரு வழியாக தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றியை பெற்றுள்ளது காங்கிஸ். தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக.,வை எதிர்த்து வெற்றி பெறுவது தான் காங்கிரசுக்கு இருந்த பெரிய பிரச்சனை, சவால் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் உண்மையான பிரச்சனையும், மிகப் பெரிய சவாலும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலுக்கு பிறகு தான் ஆரம்பமாகி உள்ளது.


கர்நாடக சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 136 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. இது தவிர சுயேட்சைகளும் சிலரும் காங்கிரசுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளனர். இதனால் காங்கிரசின் பலம் அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதில் காங்கிரஸ் தொடர்ந்து சஸ்பென்ஸ் வைத்து வருகிறது. 




சித்தராமைய்யா - சிவக்குமார் இருவரில் யாரை முதல்வர் ஆக்குவது என்ற பிரச்சனை போய் கொண்டிருக்கிறது. சமீபத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ.,க்களை கூட்டி காங்கிரஸ் தலைமை கருத்து கேட்டது. எம்எல்ஏ.,க்கள் தெரிவித்த கருத்துக்கள், அறிக்கையாக தயார் செய்யப்பட்டு கட்சி மேலிடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் கலந்து ஆலோசித்து நேற்றே முதல்வர் யார் என்பதை அறிவிப்பார் என சொல்லப்பட்டது.


ஆனால் இப்போது வரை முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் தலைமை அறிவிக்கவில்லை. இதற்கிடையில் மல்லிகார்ஜூன கார்கேவை சித்தராமைய்யா மற்றும் சிவக்குமார் இருவரும் சென்று சந்தித்து விட்டு வந்துள்ளனர். இந்த சந்திப்பின் போது என்ன பேசினார்கள்? ஏதாவது முடிவு எடுத்தார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. இதனால் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் கட்சிக்குள் தொடர்ந்து குழப்பம் நிலவுவது தெளிவாகி உள்ளது. 


இதற்கிடையில் புதிய பிரச்சனை ஒன்றும் காங்கிரசிற்கு முளைத்துள்ளது. கர்நாடகாவில் உள்ள ஜாதி அமைப்புக்களின் தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள சமூகத்தை சேர்ந்தவரை தான் முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர். கர்நாடகாவில் அதிக சதவீதம் மக்களை கொண்ட லிங்காயத் சமூகத்தின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களாக 46 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். இவர்களில் 34 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் தான் கர்நாடகாவின் அடுத்த முதல்வராக வேண்டும் என அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.


அதே சமயம் தலித் இனத்தை பல அமைப்புக்கள் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் தான் கர்நாடகாவின் புதிய முதல்வராக வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இவர்களின் எந்த சமூகத்தை சேர்ந்தவரை காங்கிரஸ் கட்சி முதல்வராக அறிவித்தாலும் மற்ற சமூகத்���ினரின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டி வரும். இதனால் கட்சிக்குள் இருக்கும் நிர்வாகிகள், சாதிய அமைப்புக்கள் என காங்கிரசிற்கு புதிது புதிதாக பிரச்சனைகள் தலைதூக்கி வருகின்றன.


காங்கிரசிற்குள் நிலவும் பல விதமான குழப்பங்கள், முதல்வரை தேர்வு செய்வதில் தாமதம் ஆகியவற்றை பார்த்தால் இந்த பாஜக., குறுக்கே புகுந்து ஆட்சியை தட்டி பறித்து விடுமோ என்ற பதற்றமும் கர்நாடக அரசியல் வட்டாரத்திலும் காங்கிரஸ் வட்டாரத்திலும் காணப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு சேசிங் சோதனை.. பஞ்சாபிடமிருந்து வெற்றியைப் பறிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்!

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்