சென்னையில் திடீரென அடித்து ஊற்றிய மழை.. மக்கள் குஷி.. 2 நாளைக்கு பெய்யுமாம்!

Mar 17, 2023,12:48 PM IST

சென்னை : சென்னையின் பல பகுதிகளில் அதிகாலை முதலே திடீரென மழை கொட்டி தீர்த்து வருவதால் சென்னை மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வெப்பமும் சற்று தணிந்துள்ளது.


சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால், இப்போதே இப்படி என்றால் கோடை காலத்தை எப்படி சமாளிக்க போகிறோமோ என சென்னைவாசிகள் புலம்பி வந்தனர். கோடை துவங்குவதற்கு முன் கோடை கால உணவுகள் போன்றவற்றிற்கு மக்கள் மாறி வந்தனர். இந்நிலையில் இன்று (மார்ச் 17) அதிகாலை முதலே சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.


கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர், அசோக் நகர், தி.நகர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, சென்னை விமான நிலையம், தாம்பரம், மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 10.4 மி.மீ., என்ற அளவில் மழை பதிவானது. இந்நிலையில் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் 23 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சென்னை ரெயின்ஸ் தெரிவித்துள்ளது.




மழை தீவிரமடைந்துள்ளதால் சாலைகளில் தண்ணீர் தேங்கும் என்பதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும் 100 அடி சாலை பகுதியை மக்கள் தவிர்க்கும் படியும் கேட்டுக் கொண்டுள்ளது. மழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து மெதுவாகவே நகர்ந்து வருவதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. 


கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென கொட்டும் மழையால் சென்னையில் வெப்பம் சற்று தணிந்துள்ளது. இதனால் மக்கள் செம குஷியாகி உள்ளனர்.


இந்த மழை 2 நாட்களுக்குப் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு.. இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!

news

மன ரீதியிலான பிரச்சனை... விரைவில் மீண்டு வருவேன்... நடிகை நஸ்ரியா!

news

இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு: நயினார் நகேந்திரன்!

news

இன்ஸ்டா ரீல்ஸால் மகள் கண் முன்னே பறிபோன தாயின் உயிர்..வைரலாகும் வீடியோ..!

news

அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை... பாஜக தேசிய தலைமை விளக்கம்!

news

வெயிலுக்கு இதமான குல்பி.. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தின் மேல் கோயில் கோபுரம்...எதிர்க்கட்சிகள் கண்டனம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்