60 வருஷத்துக்குப் பிறகு ஒரே நாளில்.. ஜில்லான டெல்லியும், மும்பையும்.. செம மழை!

Jun 25, 2023,02:34 PM IST

டெல்லி: டெல்லி மற்றும் மும்பையில் ஒரே நாளில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. 60 வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரே நாளில், டெல்லியிலும், மும்பையிலும் பருவ மழை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


நாட்டில் தென் மேற்குப் பருவ மழை ஒவ்வொரு பகுதியாக பெய்ய ஆரம்பித்துள்ளது. கேரளாவில் ஆரம்பித்த பருவ மழை தற்போது டெல்லியிலும், மும்பையிலும் தொடங்கியுள்ளது. இரு நகரங்களிலும் ஒரே நாளில் மழை தொடங்கியதுதான் விசேஷமே.


இதற்கு முன்பு 60 ஆண்டுகளுக்கு முன்புதான் இப்படி ஒரே நாளில் இரு நகரங்களிலும் பருவ மழை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், டெல்லிக்கு 2 நாட்களுக்கு முன்பே மழை வந்துள்ளது. மும்பையைப் பொறுத்தவரை 2 வாரம் லேட்டாக வந்து சேர்ந்துள்ளது.




தலைநகர் டெல்லியிலும், இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையிலும் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது.  மகாராஷ்டிரா முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.  அதேபோல மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானாவின் சில பகுதிகள், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்முவின் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.  அடுத்த 2 நாட்களில் மேலும் நல்லமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல பகுதிகளில் வெள்ளம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அந்தேரி, மலட், தஹிசார் பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டன.


மகாராஷ்டிராவின் ராய்காட், ரத்தினகிரி ஆகிய பகுதிகளுக்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. பால்கார், தானே, மும்பை, சிந்துதுர்க் பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்