சென்னை : விஜய்யின் படங்களை விட அவரின் அரசியல் என்ட்ரி தொடர்பான பேச்சு தான் தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஜூன் 17 ம் தேதி தமிழகத்தில் 234 தொகுதிகளில் இருந்தும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மார்க் வாங்கிய மாணவர்களை அழைத்து விஜய் பேசியது அதிக பரபரப்பை கிளப்பி உள்ளது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி விஜய் அரசியலுக்கு வர உள்ளதை உறுதி செய்துள்ளது.
2024 ம் ஆண்டு மே மாதம் நடக்க உள்ள லோக்சபா தேர்தல் அல்லது 2026 ல் நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தல் ஆகியவற்றின் மூலம் விஜய் தனது அரசியல் பயணத்தை துவக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. லேட்டஸ்டாக ஆன்லைன் மீடியாக்கள், டிவி.,க்கள் சிலவற்றில் பரவி வரும் தகவலின்படி, தளபதி 68 படத்திற்கு பிறகு 3 ஆண்டுகள் சினிமாவிற்கு பிரேக் எடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், அரசியல் கவனம் செலுத்த அவர் முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 19 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு 3 மாத சுற்றுலா சென்று ஓய்வெடுக்க போகிறாராம் விஜய். அதற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 ல் அக்டோபர் மாதம் முதல் நடிக்க போகிறாராம். இந்த படம் 2024 ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் 2024 ம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் விஜய் நடிக்க வேண்டிய பகுதிகளை படமாக்கி முடித்து விடுவார்கள் என சொல்லப்படுகிறது. அதற்கு பிறகு முழுக்க முழுக்க தனது கட்சி வேலைகளில் விஜய் ஈடுபட போகிறாராம்.
மற்றொரு தகவலாக, தளபதி 69 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்குவதும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாம். ஆனால் ஒப்பந்தம் ஏதும் இதுவரை கையெழுத்தாகவில்லையாம். இதனால் விஜய் சினிமாவிற்கு மிக நீண்ட பிரேக் எடுக்க போவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
{{comments.comment}}