கமல்ஹாசன் படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி?.. பரபரக்கும் கோலிவுட்!

Jul 09, 2023,05:03 PM IST

சென்னை: கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கப் போவதாக ஒரு செய்தி உலா வருகிறது.


கமல்ஹாசன் - ஸ்ரீதேவி இணை குறித்து தெரியாத சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது.. அந்த ஜோடி கொடுத்த சூப்பர் ஹிட் படங்களை அத்தனை சீக்கிரம் யாராலும் மறக்கவும் முடியாது. தமிழ் சினிமா கண்ட பெஸ்ட் ஆன் ஸ்கிரீன் ஜோடிகளில் முதல் மூன்று இடத்தில் நிச்சயம் கமல் -ஸ்ரீதேவி இருப்பார்கள். அந்த அளவுக்கு இருவரும் இணைந்து கலக்கிய காலம் அது.


தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிரபலமாக வலம் வந்த ஸ்ரீதேவி பின்னர் பாலிவுட்டுக்குப் போய் விட்டார். அங்கு இந்தியிலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்து அமிதாப்பச்சனின் ராசியான ஹீரோயினாக மாறிப் போனவர். இந்தியா முழுவதும் ஸ்ரீதேவியின் புகழ் பரவிய காலம் அது.




கடைசிக்காலத்தில் தமிழில் புலி படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார் ஸ்ரீதேவி. இந்த நிலையில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழில் நடிக்கப் போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்தியில்தான் பெரும்பாலும் நடித்து வருகிறார் ஜான்வி. சமீபத்தில் அவர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் நடிக்க ஒரு படத்தில் (படம் பெயர் தேவாரா) புக் ஆகியுள்ளார்.


இந்தப் படத்தை முடித்த பின்னர் அவர் தமிழில் அறிமுகமாகவுள்ளதாக சொல்கிறார்கள். அவர் நடிக்கப் போகும் தமிழ்ப் படத்தை நிச்சயம் அவரது அப்பா போனி கபூர் தயாரிக்கப் போவதில்லை. மாறாக, கமல்ஹாசன்தான் தயாரிக்கப் போகிறாராம். விக்னேஷ் சிவன்தான் இப்படத்தின் இயக்குநர் என்று சொல்கிறார்கள். நாயகன் யார் தெரியுமா.. லவ் டுடே, கோமாளி படங்களை இயக்கியவரும், லவ்  டுடே படத்தின் நாயகனுமான பிரதீப் ரங்கநாதன்தானாம்.


இந்தத் தகவல் உண்மையாக இருந்தால் நிச்சயம் இது வித்தியாசமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பார்க்கலாம்.. என்ன நடக்கும் என்பதை.

சமீபத்திய செய்திகள்

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

news

மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?

news

Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!

news

தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!

news

அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!

news

Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?

news

கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்