சென்னை : அஜித் அடுத்த நடிக்க உள்ள ஏகே 62 படத்திற்கு இரண்டு கதைகள் ரெடியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அஜித் எதை தேர்ந்தெடுக்க போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
விஸ்வாசம், வலிமை, துணிவு என வரிசையாக பிளாக்பஸ்டர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அஜித். இதனால் அவர் அடுத்து என்ன படம் நடிக்க போகிறார், அஜித்தை யார் இயக்க போகிறார், அடுத்த பட அப்டேட் எப்போது வரும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் செம ஆர்வமாக இருந்து வருகின்றனர்.
திடீர் உடல்நலக்குறைவு... நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி
விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை என வரிசையாக ஆக்ஷன், சென்டிமென்ட் படங்களில் நடித்த அஜித், துணிவு படத்தில் வித்தியாசமான வங்கி கொள்ளையனாக நடித்து அசத்தி இருந்தார். ரொம்பவே ஊபர் கூல் லுக்கில், செம ஜாலியாக அஜித் நடித்திருந்த டார்க் டெவில் கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது. இதனால் அஜித்தின் அடுத்த படம் எப்படிப்பட்ட கதையாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வம் காட்ட துவங்கினர்.
துணிவு படம் துவங்கிய சில நாட்களிலேயே அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. வலிமை படம் 2 ஆண்டு காத்திருப்பிற்கு பிறகு ரிலீசானதால், ரசிகர்களை இனி காத்திருக்க வைக்கக் கூடாது என தனது கொள்கையை தளத்திக் கொண்ட அஜித், அடுத்தடுத்த படங்களில் வேகமாக கமிட்டாகி வருகிறார். அஜித் அடுத்து நடிக்க உள்ள ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்க போகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பட அறிவிப்பு வந்ததோடு சரி, அதற்கு பிறகு அப்டேட் ஏதும் வெளி வராததால் ரசிகர்கள் அப்செட் ஆகினர். இந்நிலையில் சமீபத்தில் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதாகவும், அஜித்தின் ஏகே 62 படத்திற்கு பதிலாக ஏகே 63 படத்தை தான் அவர் இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஏகே 62 படத்தை டைரக்டர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும், சந்தோஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக ஏகே 62 படத்திற்காக மகிழ் திருமேனி இரண்டு கதைகளை தயார் செய்திருக்கிறாராம். ஒன்று, ஆக்ஷன் கலந்த குடும்ப பொழுதுபோக்கு கதை. மற்றொன்று ஸ்பை த்ரில்லர் கதை. இந்த இரண்டு கதைகளும் அஜித்திற்கு பிடித்து விட்டதாம். ஆனால் ஏகே 62 படத்திற்காக அவர் எந்த கதையை தேர்வு செய்ய போகிறார் என்கிறது தான் தற்போது ரசிகர்களின் பெரிய ஆர்வமாக இருந்து வருகிறது.
பாட்ஷா 2 படத்தில் வேறு அஜித் நடிக்க உள்ளதாக சொல்லப்படுவதால், ஏகே 62 படத்திற்காக ஆக்ஷன் கலந்த குடும்ப சென்டிமென்ட் கதையை தான் அஜித் தேர்வு செய்திருப்பதாக என சொல்லப்படுகிறது. அதே சமயம் மகிழ் திருமேனி, த்ரில்லர் படம் எடுப்பதில் கில்லாடி என்பதால் அஜித்தின் சாய்ஸ் என்னவாக இருக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக .. எம்.ஏ. பேபி தேர்வு!
தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!
அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!
Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!
அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!
{{comments.comment}}