நன்கு வேதம் கற்ற அந்தணர்கள் நான்கு பேசிக் கொண்டிருந்தார்கள். யாருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது பற்றி நான்கு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள். நான்கு பேருமே தனக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்றும் சொல்லிக் கொண்டார்கள். இந்த உரையாடல் ஒரு கட்டத்தில் தீவிரமான விவாதம் ஆனது.
அப்போது முதலாம் நபர், நான் வேதங்கள் அனைத்தும் படித்திருப்பதால் தனக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்றார். இரண்டாவது நபர், நான் வேத மந்திரகளை முறைப்படி கற்றிருப்பது மட்டுமல்ல அதன் பொருள் உணர்ந்து தற்போதும் அதை தொடர்ந்து வருவதால் தனக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்றார்.
மூன்றாம் நபர், நான் வேத மந்திரகங்களின் பொருள் உணர்ந்து, மற்றவர்களுக்கு உரிய முறையில் வேதங்களில் சொல்லிய படி உதவிய செய்து வருகிறேன். அதனால் எனக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்றார். நான்காவது நபர், நான் முறைப்படி கர்மங்களை செய்து, அனுஷ்டானங்களை கடைப்பிடித்து வாழ்ந்து வருவதால் தனக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என தெரிவித்தார்.
இந்த நான்கு அந்தணர்களின் பேச்சுக்களையும் வெகு நேரமாக கவனித்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் அவர்களிடம் வந்து, "நான் போனால் போகலாம்" என கூறி விட்டு தனது பாதையில் நடக்கதுவங்கினார். நான்கு அந்தணர்களும் ஒன்றும் புரியாமல் அந்த மூதாட்டியை பின் தொடர்ந்து சென்று, நாங்கள் வேதம் கற்றுள்ளோம் அதனால் சொர்க்கத்திற்கு செல்வோம் என உறுதியாக சொல்கிறோம். உனக்கு என்ன தெரியும் என்று போனால் போகலாம் என்று கூறி விட்டு செல்கிறாய் என கேட்டனர்.
இப்படி கேட்டதும் அந்த அந்தணர்களை பார்த்து அந்த மூதாட்டி சிரிக்க துவங்கினார். "வேதம் எல்லாம் படித்துள்ளேன் என்றீர்கள். இந்த சாதாரண மூதாட்டி சொல்லுக்கு அர்த்தம் கூட புரியவில்லையா உங்களுக்கு? நான் என நான் குறிப்பிட்டது என்னை அல்ல. நான் என்ற ஆணவம், அகந்தையை. அந்த நான் என்ற ஆணவத்தை விட்டொழித்து. சகலமும் அவனே என உணர்ந்து சரணாகதி அடைந்தால் சொர்க்கத்திற்கு போகலாம்" என மூதாட்டி சொன்னதும் அந்தணர்களுக்கு தலைகுனிந்து நின்றனர்.
{{comments.comment}}