சென்னை : சிம்பு நடித்த பத்து தல படம் மார்ச் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ மார்ச் 18 ம் தேதி வெளியிடப்பட்டது. ரசிகர்களின் நீண்ட காத்திருப்பு மற்றும் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ரிலீசாக உள்ள பத்து தல படத்தின் டிரைலர் எப்படி இருக்கு என்பது பற்றிய ஒரு சிறு அலசல் இது.
சிம்பு முதல் முறையாக வயதான தாதா ரோலில் நடித்துள்ள படம் பத்து தல. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த திரில்லர் படம் என்பது டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது. டிரைலரின் ஆரம்பமே தமிழக முதல்வரை காணவில்லை என்ற பரபரப்பான செய்தியுடன் துவங்குகிறது. ஏஜிஆர் என்ற தாதா பற்றி கெளதம் மேனன் சொல்ல, அடுத்தடுத்த ஷாட்களில் வெட்டு, குத்து என காட்டப்படுகிறது. கெளதம் கார்த்திக், யார் அந்த ஏஜிஆர் என கேட்க, ஹெலிகாப்டரில் இருந்து கருப்பு உடையில் என்ட்ரி கொடுக்கிறார் சிம்பு.
ஏஜிஆர் என்ற யாரும் அசைக்க முடியாத தனி சாம்ராஜ்யம் நடத்தும் தாதாவாக வரும் சிம்பு, அரசியல், அடிதடி என அனைத்தையும் தனது கட்டுக்குள் வைத்துள்ளார். சிம்புவின் அடிதடி, கொலை ஆகியவற்றிற்கு இடையே பஞ்ச் டயலாக், பின்னணியில் ஏ.ஆர்.ரஹ்மானின் மிரட்டல் இசை ஆகியன பத்து தல டிரைலரை வேற வெலவல் ஹிட் ஆக்கி உள்ளது.
படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தை அனைவரின் மனதிலும் ஏற்படுத்துகிறது.
கெளதம் மேனன் பேசும் வசனங்கள், அவரது குரல் ஆகியன வேட்டையாடு விளையாடு படத்தையும், காக்க காக்க படத்தையும் மிக்ஸ் பண்ணி பார்த்த உணர்வு வருகிறது. "இங்க எவன் ஆளனும், எவன் வாழனும்னு நான் தான்டா முடிவு பண்ணணும்", "ஆட்டை ஓநாய் கொல்லும்...ஓநாயை சிறுத்தை கொல்லும்...சிறுத்தையை புலி கொல்லும்...புலியை சிங்கம் கொல்லும்...சிங்கத்தை கொல்லும் மிருகம் இன்னும் பிறக்கல" என்பது போன்ற டயலாக்குகள் நிச்சயம் தியேட்டரில் தாறுமாறாக விசில் பறக்க செய்யும்.
டிரைலரின் இறுதியில் சிம்பு பேசும், துரோகமும், துரோகிகளும் இந்த கேஜிஆருக்கு புதுசு இல்ல என்ற டயலாக்கை, இது கேஜிஆருக்கு எழுதப்பட்ட டயலாக்கா இல்லை எஸ்டிஆருக்காக எழுதப்பட்ட டயலாக்கா என அனைவரையும் கேட்க வைக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வழக்கம் போல் பாடல்கள் அனைவரையும் ஆட்டம் போட வைத்துள்ளது.
கெளைம் கார்த்தி அடியாளாக வருவது போலவும், பிரியா பவானிசங்கர் அவரை தட்டிக் கேட்கும் பெண்ணாக வருவதாகவும் காட்டப்படுகிறது. சென்ட்ராயனும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.பத்து தல நிச்சயம் சிம்பு ரசிகர்களிடம் விஸ்வரூபம் எடுக்கும் என்பதை டிரைலரே காட்டுகிறது.
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}