சித்தராமையா ஆட்சியமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு.. நாளை மதியம் பதவியேற்பு விழா!

May 19, 2023,09:22 AM IST
பெங்களூரு: கர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சித்தராமையாவை ஆட்சியமைக்க ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அழைப்பு விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

கர்நாடக மாநில சட்டசபைக்கு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்று பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அடுத்த முதல்வராக சித்தராமையாவை கட்சி மேலிடம் தேர்ந்தெடுத்தது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு கர்நாடக சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில் முறைப்படி சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டார்.



இதையடுத்து சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சென்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினர். அந்தக் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் கெலாட், ஆட்சியமைக்குமாறு சித்தராமையாவைக் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து நாளை பிற்பகல் 12.30 மணியளவில் பெங்களூரு கன்டீரவா உள்ளரங்க மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும். அதில் முதல்வராக சித்தராமையா பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார். இதே விழாவில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் துணை முதல்வராக பொறுப்பேற்பார். 

இவர்களுடன் சிறிய அளவிலான அமைச்சரவையும் பதவியேற்றுக்  கொள்ளும் என்று ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

news

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

news

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!

news

நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!

news

நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!

news

இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!

news

மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!

news

உலகமே எதிர்பார்க்கும் அஜித்தின் குட் பேட் அக்லி நாளை வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்