சென்னை : எனக்கு நண்பர்களே கிடையாது. நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களே பார்த்தால் பொறாமையாக உள்ளதாக மிகவும் வருத்தத்துடன் ட்விட்டரில் போஸ்ட் போட்டுள்ளார் நடிகரும், டைரக்டருமான செல்வராகவன்.
தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் செல்வராகவன். தம்பி தனுசை வைத்து பல வித்தியாசமான காதல் கதைகளை இயக்கி, டாப் டைரக்டர்களில் ஒருவராக தமிழ் சினிமாவின் மூலம் இடம்பிடித்தவர் செல்வராகவன். பல வெற்றி படங்களை இயக்கியவரின் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தன. இதனால் டைரக்ஷனுக்கு கேப் விட்டார் செல்வராகவன். அடுத்து எப்போது, யாரை வைத்து, என்ன படம் இயக்குவார் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கையில், திடீரென நடிகராக அவதாரம் எடுத்தார்.
விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் விசாரணை அதிகாரியாக வந்து யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். "ச்சே...இவருக்குள்ள இப்படி ஒரு நடிகரா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே" என ரசிகர்கள் மட்டுமல்ல கோலிவுட்டை ஆச்சரியப்பட்டு போனது. அதற்கு பிறகு சாணிகாயிதம் படத்திலும் கீர்த்தி சுரேஷின் அண்ணனாக வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இதற்கு பிறகு சமீபத்தில் இவர் நடித்து வெளியான பாகாசூரன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படம் ரிலீசான நிலையிலும் அவர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக பாகாசூரன் படம் வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் தனுசை வைத்து நானே வருவேன் படத்தையும் இயக்கி முடித்தார். இதனால் தமிழ் சினிமாவில் தற்போது கவனிக்கப்படும் நடிகராகவும் செல்வராகவன் மாறி விட்டார்.
இந்நிலையில் ட்விட்டரிலும் உருக்கமாக ஒரு போஸ்ட் போட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் செல்வா. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது...எங்கு போய் நட்பை தேடுவேன்" என குறிப்பிட்டுள்ளார்.
செல்வராகவனின் இந்த போஸ்டிற்கு ஆதரவுகள் குவிந்து வருகிறது. உண்மை தான் என ஏராளமானவர்கள் கமெண்ட் செய்துள்ளனர். இருந்தாலும் செல்வராகவன் எதற்காக திடீரென எதற்காக இப்படி ஃபீல் பண்ணு போஸ்ட் போட்டுள்ளார்? அப்படி என்ன நடந்தது? என்ற கேள்வியும் கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது.
{{comments.comment}}