நீ செய்யும் மாயம்!

May 09, 2023,09:41 AM IST

- கவிஞர் சீதாலெக்ஷ்மி 

மணி என்னாச்சு?.. ஓ.. பத்து ஆயிருச்சா.. 
என்ன இன்னிக்கு தூக்கமே வரலை.. இன்னிக்கு மட்டுமா.. பல நாட்களுக்கு இப்படித்தானே!

படுக்கையில் புரண்டு கொண்டிருந்தபோது மனசுக்குள் நினைவுகள் உருளத் தொடங்கின.
எண்ணங்கள் கரைபுரளும்போது மனசும் சேர்ந்தேதான் ஆர்ப்பரிக்கும்.. உணர்வுகள் உந்தித் தள்ளும்போது, உள்ளுக்குள் ஏற்படும் இன்பமும், சந்தோஷமும்.. ஆயிரம் மடங்கு தித்திப்புக்கு சமம்.
எழுந்து உட்கார்ந்து எழுதத் தொடங்கினேன்.



இதை 
எழுதும்பொழுது தன்னியல்பாக ஒரு பாடல் தோன்றியது..

"காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி 
மலர்களிலே அவள் மல்லிகை" .....என்ன ஒரு அருமையான பாடல், இல்ல!

இயற்கையே அழகுதான்.. அதிலும் வசந்தகாலம் இருக்கே.. அது பேரழகுக் காலம்.. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்ற வயல்வெளிகள் ....!!  பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம் ... கண் இமைகள் மலர இயற்கையின் வெளிப்பாடுகள்தான் எத்த்தனை எத்தனை அழகு.. வஞ்சமில்லாத அழகு.. கொள்ளை அழகு... !

அதிகாலையில் மலரிதழ் மீது சத்தமில்லாமல் முத்தமிடும் பனிக்கூட்டம்....!!

அப்படிப்பட்ட ஜில் ஜில் காலையில்.. காதல் அரும்புகள் மொட்டு விடும்.. துயில் எழுந்து சாணம் தெளித்து கோலமிட்டு  காத்திருப்பது அவன் வருகைக்காக..!!

தெருமுனை குழாயடியில் தண்ணீர் எடுக்கச் செல்வதும் அவன் விழி காண....!!

நான் காண விரும்புகையில் நீ  வருவாய் .. ஆனால் நீ காண விரும்புகையில் உன்னை தேட விடுவேன்.. அப்போது உன் முகத்தில் தெறிக்குமே அந்த செல்ல கோபம்.. என்னை சிலிர்க்க வைக்கும்.. அதைக் கண்டு அனுபவிப்பதில் ஒரு  அலாதி விருப்பம் எனக்கு...!!

சந்தையில் வாங்கி வந்த மல்லிப்பூ, மலராத மொட்டுக்களாய் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டிருக்கும்.. வாங்கியதை வாசத்தோடு.. உன் பாசத்தோடு.. யார் கண்களிலும் படாமல் என் கையில் திணித்துச் செல்வாய்.. பூவின் வாசம் கண்டு பிறர் பார்ப்பதற்குள்  நுகர்வதற்குள், சட்டென என் துணிப்பெட்டிக்குள் மறைத்து வைத்து பூட்டிக்கொள்வேன்.. என் மனம் மயங்குவதுபோல் நான் உடுத்தும் புடவைகள் மயங்கிக் கிறங்கி உறங்கும் .....!!

உனக்கு ஞாபகம் இருக்கா மை டியர் செல்லா?

இயற்கையின் சீற்றத்தில் ஒரு நாள் வெள்ளம் ஏற்பட... வீட்டு வாசலில் நம் முழங்கால் வரை நீர் தேங்கியதில் குட்டி குட்டி மீன்களான அயிரை கெண்டை எல்லாம் நீந்தி விளையாடுவதைக் கண்டு  உன்னோடு சேர்ந்து நானும் மீன் பிடித்து  விளையாடினோம்

ஞாபகம் இருக்கிறதா....?

தண்ணீருக்குள் நீந்திய மீன்கள் கொஞ்ச நேரத்திலேயே "தாழி"க்குள் துள்ளிக் குதித்து கொதித்தது... அம்மாவின் கை மணத்தில் ....!!

சுடச்சுடச் சோறு போட்டு கொதி அடங்கிய மீன் குழம்பை ஊற்றி உனக்கு நானும் எனக்கு நீயும் மாறி மாறி ஊட்டிக் கொண்டதை மறக்க இயலுமா.....!!

நான் இன்னும் அந்த வாசத்தை.. நம் பாசத்தை.. நீ தந்த நேசத்தை உணர்ந்து கொண்டிருக்கிறேன்.. அடி ஆழ் மன்தில்.. நினைக்க நினைக்க பெருமூச்சு வந்து வாட்டும்.

நீ செய்யும் மாயம்தான் எத்தனை எத்தனை!

பச்சை நிற மருதாணி இலையை அரைத்து குழப்பி உள்ளங்கையில் இட்டபின் சிவப்பதை போல.. இம்சை செய்யும் மாமனை கட்டி அணைத்து தழுவாமலே என் கன்னங்கள்  சிவந்தது ... வளைந்து நெளிந்து ஓடும் ஆறு கடலில் கலப்பது போல.. அனுதினமும் உன் எண்ணங்களை  நினைந்து ஒளிந்து மறைந்து  உன்னில் ஊடுருவிக் கலந்திருந்தேன்..!!

ஆனால்.....!

சிறிது நேர அழகை அள்ளித் தரும் வசீகர வானவில் வந்து பின் அப்படியே மறைந்து செல்வதைப்போல.. சில நாள் வந்த சொந்தங்களுக்காக எனதான பந்தத்தை முறித்து  உதறி சென்றாயே...!!

அடை மழை  மேகத்திற்கு திரை போட முடியாததுபோல்  
அழுகையுடன் தேம்பி நின்றேனே.. மறந்து துறந்து சென்றாயே....!!

வாழ்க்கையில் வலிகள் இருந்தால்தான் நல் வழிகள் பிறக்கும்..
காதலில்  வலிகள் இருந்தால் வரிகள் பிறக்கும். ...!! 

சில நினைவுகள் வலிதான்.. ஆனால் பலம் கொடுக்கும் வழியாக அந்த வலிகள் இருக்கும் வரை.. நினைத்துக் கொண்டுதான் இருப்பேன்..!

சமீபத்திய செய்திகள்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

தங்கம் விலை விடாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏன்.. நிபுணர்கள் தரும் விளக்கம் இதுதான்!

news

கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரைக் கத்தியால் குத்திய விக்னேஷுக்கு.. ஜாமீன் மறுப்பு!

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

அதிகம் பார்க்கும் செய்திகள்