சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி டைரக்டர்களில் ஒருவரும், நடிகரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மனைவி சோபா சந்திரசேகருடன் சென்று நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எடுத்த போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் மிக உருகமாக கருத்து பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினியின் நினைவு வருவதை போல், கேப்டன் என்றாலே நினைவிற்கு வருபவர் விஜயகாந்த். 1980 களில் துவங்கி தமிழ் சினிமாவில் நீங்காத இடம்பிடித்துள்ளனர் விஜயகாந்த். ஆரம்ப காலத்தில் எஸ்.ஏ.சந்திரேசகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. ரஜினி, கமல் டாப் ஹீரோக்களாக இருந்த காலத்திலேயே அவர்களுக்கு இணையாக தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த்.
விஜயகாந்த் சினிமாவில் பிஸியாக இருந்த காலத்திலும் சரி, அவர் அரசியலுக்கு வந்த காலத்திலும் சரி, அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருக்கும் தற்போதைய நிலையில் சரி விஜயகாந்த்திற்கு என்று தனி ரசிகர்க கூட்டமே உள்ளது. விஜயகாந்த்தின் 33 வது திருமண நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மனைவி சோபாவுடன் விஜயகாந்த்தின் வீட்டிற்கே சென்று அவரை சந்தித்து, வாழ்த்து கூறினார்.
நடக்க முடியாத நிலையில் இருக்கும் விஜயகாந்த்தின் கைகளை பிடித்து, "விஜி... நல்லா இருக்கியா?" என நலம் விசாரித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எஸ்ஏசி, விஜயகாந்த் எனது நீண்ட கால நண்பர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவரை நேரில் வந்து பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது தான் அதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது என தெரிவித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பான போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எஸ்ஏசி, என் உயிரை நான் சந்தித்த போது என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். எஸ்ஏசி,,யின் இந்த நெகிழ்ச்சிகரமான பதிவிட்டு லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.
{{comments.comment}}