ஐதராபாத் : ராம் சரணுக்கு முதல் குழந்தை, அதுவும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்காக திரையுலகை சேர்ந்த பலரும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ராம் சரணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டு உறுதி செய்துள்ளது. அதில், ராம் சரண் கொன்னிதிலா மற்றுமண உபாசனா காமினேனி தம்பதிக்கு ஜூன் 20 ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் ராம்சரண், உபாசனாவிற்கு 2012 ம் ஆண்டு ஜூன் 14 ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவரும் ஒருவர் மீது மற்றொருவர் தீராத காதல் கொண்டிருந்தனர். இவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உபாசனா கர்ப்பமாக உள்ளதை தனது ரசிகர்களுக்கு அறிவித்தனர். அனுமன் அருளால் எங்களுக்கு முதல் குழந்தை பிறக்க போகிறது. அதை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என ராம் சரண் தெரிவித்திருந்தார்.
திருமணமாகி கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு ராம்சரணுக்கு குழந்தை பிறந்துள்ளதை அவரது குடும்பத்தினர்களும், திரையுலகினரும் கொண்டாடி வருகின்றனர். அல்லு அர்ஜூன் தனது மனைவியுடன், மருத்துவமனைக்கே நேரில் சென்று வாழ்த்தி விட்டு வந்துள்ளார். நடிகை ரகுல் ப்ரீத் சிங், போட்டோவுடன் இன்ஸ்டாவில் தனது வாழ்த்தை பகிர்ந்துள்ளார். தான் தாத்தா ஆன மகிழ்ச்சியத சிரஞ்ஜீவியும் பத்திரிக்கையாளர்களுடன் பகிர்ந்துள்ளார்.
ராம் சரண் தற்போது டைரக்டர் ஷங்கர் இயக்கும் கேம் சேஜ்சர் படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் படமான இதில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், அஞ்சலி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேம் சேஞ்சர் படம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
{{comments.comment}}