உன்னை என் இதழ் வரை தானே உறவு வைத்தேன்.. ஆனால் நீ இதயம் வரை பாய்ந்து விட்டாயே!

Jun 17, 2023,12:53 PM IST
- பிரேமா சுந்தரம்

இது திருநெல்வேலி டவுண் பற்றிய கட்டுரையா.. சத்தியமா இல்லை.. நம்ம friend list la இருக்குற பாதிபேரு திருநெல்வேலி காரவுக..‌ எசகுபிசகா நான் எதாச்சும் சொல்லப் போக அருவாளத் தூக்கிட்டா என்ன பண்றது.. இந்த கட்டுரை திருநெல்வேலி டவுணுக்குள்ள தாமிரபரணி தண்ணி குடிச்சு ஒரு நாலு வருஷம் நாங்க நல்லா சாப்பிட்ட கதை.. 

வருடம் 2005.. இந்தா இருக்கிற திருநெல்வேலி அப்போ எனக்கு வெகுதூரத்தில் இருக்கிற மிகப் பெரிய பிரம்மாண்டமான ஊரா தெரிஞ்சது.. நாலு வருஷம் பொறியியல் படிப்பு அங்கேதான் அரசினர் பொறியியல் கல்லூரியில்.. நாகர்கோவிலில் இருந்து பேருந்து ஏறி டிக்கெட் எடுத்து உட்கார்ந்து ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை காலை இப்படித்தான் ஆரம்பிக்கும்.. டிரைவர் சார் ப்ளீஸ் govt college முன்னாடி நிறுத்துங்கனு கெஞ்சி கூத்தாடி இறங்குவோம்.. ஏனெனில் திருநெல்வேலி  புதிய பேருந்து நிலையத்துல இருந்து ஆட்டோவில் வருகிற அளவுக்கு நம்ம கிட்ட பட்ஜெட் கிடையாது.. 



சாமி பட திரிஷா மாதிரி திங்கள் கிழமை திருநெல்வேலி போக ரூ19/-, வெள்ளிக்கிழமை நாகர்கோவில் வருவதற்கு ரூ19/- அப்புறம் இதர செலவுகளுக்கு ரூ15/- மொத்தம் ஒரு ரூ 60/- தான் நம்ம கையில இருக்கும்..  அதுலயும் மிச்சம் புடிச்சு மாசத்துல ஒரு தடவை பாளையங்கோட்டை பஸ்டான்ட் எதிரில் இருக்கிற ராஜாஸ் டவர் மூணாவது மாடில இருக்கிற ராஜாஸ் ஹோட்டல்ல ஒரு பிளேட் பிரியாணி ரூ40/- க்கு வாங்கி சாப்பிடுவோம்.. அதுவும் one by two.. சர்வர் ஒரு மாதிரி பார்ப்பார்.. அட அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா னு சிரிச்சுக்குவோம்.. 

ஆனால் இதுக்கும் நம்ம பட்ஜெட் ஒத்து வரவில்லை.. அதனால பஸ் ஏறி டவுணுக்கு போய் நெல்லையப்பர தரிசனம் பண்ணிட்டு அப்படியே எல்லா தெருவையும் அலசி கடைசியா கண்டுபிடிச்சோம் நல்ல ஒரு பாய் ஹோட்டல..  பாய் நமக்கு ரூ30/- க்கு பிரியாணி குடுத்தாரு.. (ஒரு வேளை காக்கா பிரியாணியா இருக்குமோனு விபரீதமா யோசிக்க கூடாது).. கடைசில பிரியாணி சாப்பிடறுதுக்காக நெல்லையப்பரை கும்பிட போற மாதிரி ஆகிடுச்சி.. அப்புறம் வந்தாரு நம்ம ஆபத்பாந்தவன் ருசி ஹோட்டல்.. எங்க கல்லூரிக்கு ரொம்ப பக்கத்துல நாங்க 3ம் வருடம் படிக்கும் போது திறந்தார்கள்.. அப்புறம் என்ன.. எட்றா பசுபதி வண்டிய வுட்றா ருசியப் பாத்துனு... எங்கள் நாக்கை பிரியாணிக்கும் பரோட்டாவுக்கும் சிக்கனுக்கும் மட்டனுக்கும் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் அடிமையாக்கி விட்டது இந்த சிறிய உணவகம்.. 

96 படத்துல நம்ம விஜய்சேதுபதி திரிஷாவ ரொம்ப வருஷத்துக்கு பிறகு முதல் தடவை நேரில் பார்க்கும் போது  VJSP கண்ணுல தெரியுற அந்த பரிதவிப்பு படபடப்பு எங்களுக்கும் உண்டு இந்த பிரியாணியின் மேல்.. எவனோ ஒரு பெர்சிய நா���்டுக்காரன் நம்ம ஊருல பல நூறு வருஷத்துக்கு முன்னாடி அறிமுகப்படுத்தி வச்சுட்டு போயிட்டான்.. இன்னும் நம்மளால இந்த பிரியாணி பந்தத்தை உடைக்க முடியவில்லை..

இனிமேல் திருநெல்வேலி போகின்ற போது மறவாமல் பாருங்கள் எங்கள் அரசினர் பொறியியல் கல்லூரி எதிர்ப்புறம் சற்று தொலைவில் "ருசி ஹோட்டல்" என்ற உணவகம் இருக்கும்..  இந்த பத்து வருடங்களில் பல நூறு தடவை திருநெல்வேலிக்கு பேருந்தில் பயணம் செய்து விட்டேன்.. ஒவ்வொரு முறையும் என் ஏக்கப் பார்வை என் கல்லூரியின் மீதும் இந்த உணவகத்தின் மீதும் தவறாமல் விழும்..

ஹேய் பிரியாணியே.. உன்னை என் இதழ் வரை தானே உறவு வைத்தேன்.. ஆனால் நீ என் இதயம் வரை பாய்ந்து விட்டாயே..!

சமீபத்திய செய்திகள்

news

சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்