கொச்சி : கேரளத்தில் மலையாள மொழி பேசும் மக்களால் சாதி, இன, மதம் வேறுபாடு இன்றி ஓணம் பண்டிகை அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரையிலான பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. தற்போது மலையாளம் மொழி பேசும் மக்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர் .அவர்கள் அனைவரும் தனது சொந்த மாநிலத்துக்கு வந்து உறவினர்களுடன் சேர்ந்து ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
கேரள மக்கள் தங்கள் இல்லங்களில் அத்த பூ கோலம் இட்டு, விதவிதமான உணவு சமைத்து, புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் பத்து நாள் விழாவான இறுதி நாள் ஓணம் திருவிழாவினை கொண்டாடி சிறப்பித்து வருகின்றனர். மேலும் மலையாள மாதமான சிங்கம் மாதத்தை புத்தாண்டு விழாவாகவும் கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை அறுவடை நாள் என்றும் அழைப்பர் . இந்த புத்தாண்டு வாழ்த்துக்களை சக நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சமூக வலைத்தளங்களின் வாயிலாக வாழ்த்துக்களையும்,நன்றியினையும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் பண்டிகையை சாதி மத இனம் வேறுபாடு இன்றி இன்முகத்தோடு வரவேற்று தங்களின் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன.மேலும் கோயில்களில் செண்டை மேளங்கள் முழங்க சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தி வருகின்றனர்.
கேரளத்தின் அண்டை மாநிலமான தமிழகத்தின் ,கோவை, சென்னை ,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் ஓணம் கொண்டாட்டம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக இங்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளனர். மலர் சந்தையில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று விதவிதமான வண்ண மலர்களை வாங்கி வீடுகள் முழுவதும் அலங்கரித்து ஓணத்தை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
கன்னியாகுமரியில் உள்ள மருத்துவமனையில் அத்தப்பூ கோலமிட்டு "சத்யா" என்ற விதவிதமான உணவு சமைத்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து தங்களின் அன்பை வெளிப்படுத்தி ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இங்கு போட்டிகளும் நடத்தி பரிசுகள் வழங்கி உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஓணம் கொண்டாட்டம்:
நீலகிரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு உள்ளூர் விடுமுறையாக அறிவித்துள்ளது. மேலும் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள கல்லூரிகளில் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது . இங்கு மாணவர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு கோலத்தைச் சுற்றி நடனம் ஆடினர். இதில் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். இங்கு செண்டை மேளம் முழங்க மாணவிகளின் நடனம் ஆடி உற்சாகத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் ஓணம் கொண்டாட்டம்:
கோவை மாவட்டத்தில் மலையாளம் மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ளனர். அதனால் கோவை மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் உள்ள மருத்துவமனை, கல்லூரிகளில் ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மக்கள் அனைவரும் அத்தப்பூ கோலமிட்டு நடனம் ஆடியும்,பட்டாசு வெடித்தும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னையிலும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர் . இப்படி தமிழக முழுவதும் உற்சாகத்துடன் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஓணம் பண்டிகை ஒற்றுமையை பறைசாற்றும் விழாவாக உள்ளது எனக் கூறி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆளுநர் போன்றோர் மலையாளம் மொழி பேசும் கேரள மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
{{comments.comment}}