சூப்பர் இளமைத் தோற்றத்தில் நித்தியானந்தா.. நல்லா மெலிஞ்சிருக்காரே.. தாடியையும் காணோம்!

Feb 26, 2023,09:13 AM IST
சென்னை: நித்தியானந்தா சாமியார் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் இதுவரை சரியாக தெரியவில்லை... அவருக்காக பல்வேறு வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் காத்துள்ளன.. ஆனால் அவரோ கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி விட்டதாக கூறி தனி ராஜ்ஜியமே நடத்திக் கொண்டிருக்கிறார்.

சமூக வளைதளங்களில் கைலாசா குறித்த அப்டேட்டுக்களை தினசரி சுடச் சுட போட்டுக் கொண்டே இருக்கிறது நித்தியானந்தா டீம். அவரது உரைகள், "கைலாசா"வில் நடைபெறும் நிகழ்ச்சிகள், பூஜைகள் உள்ளிட்டவை குறித்து அவ்வப்போது ஏதாவது அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது.



திடீர் திடீரென சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவ்வப்போது அப்டேட்டுகளைக் கொடுத்து அசர வைத்து வருகிறது நித்தியானந்தா டீம். கைலாசா நாட்டுக்கும், தென் ஆப்பிரிக்காவின் டிலாமினி அரசுக்கும் இடையே தூதரக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஒரு டிவீட் கூறியது. இந்த டிலாமினி அரசு எங்கிருக்கிறது என்று பலருக்கும் தெரியாது.  அந்த டிலாமினி அரசும், கைலாசா அரசைப் போலவே கண்ணுக்குத் தெரியாத  அரசாக இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதேபோல அமெரிக்காவின் நெவார்க் நகரத்துடன், கைலாசா நாட்டுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவலை வெளியிட்டு "என்னங்கடா நடக்குது" என்ற கேள்வியை எல்லோருக்குள்ளும் எழுப்பினார் நித்தியானந்தா.  இதுதொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படங்களும் கூட மக்களை அட என்று ஆச்சரியப்பட வைத்தன. எப்படி இதையெல்லாம் நித்தியானந்தாவால் செய்ய முடிகிறது.. உண்மையில் அவர் என்னதான் செய்கிறார், எங்குதான் இருக்கிறார் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.



இந்த நிலையில் சமீபத்திய நித்தியானந்தாவின் போட்டோக்கள் மிக மிக இளமையாக இருக்கின்றன. இவையெல்லாம் புதிய படங்களா அல்லது பழைய படங்களா எனறு தெரியவில்லை. வழக்கமாக தாடி மீசையுடன் கூடிய படமும், வீடியோவும்தான் அதிகமாக வரும். அதில் சற்று பூசினாற் போலவும் இருப்பார் நித்தியானந்தா. ஆனால் சமீப காலமாக வெளியாகும் படங்களில் மிகவும் மெலிந்திருக்கிறார்.. தாடி மீசையும் இல்லை. மொத்தமாக வழித்திருக்கிறார். தலைமுடியும் அடர்த்தியாக இல்லை. பார்க்க சம்மர் கட் போல இருக்கிறது. ஒரு வேளை கைலாசாவில் வெயில் காலமோ என்னவோ தெரியவில்லை.



ஜெனீவாவில் உள்ள ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறி ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். அதில் கூட்ட அரங்கில் நித்தியானந்தா கட் அவுட்டை வைத்து "கைலாசாவின் தூதர்" அதை வணங்குவது போலவும் ஒரு போட்டோ போட்டுள்ளனர்.. இது ஐ.நா.வுக்குத் தெரியுமா என்பதுதான் பலருடைய கேள்வியாக உள்ளது!

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்