"முகம்மது.. மரியா.. நுஷி.. ஜோஸ்.. அகமது"... இதெல்லாம் என்ன தெரியுமா?

Jun 26, 2023,04:05 PM IST
சென்னை: உலகிலேயே அதிக அளவு பயன்படுத்தப்பட்ட பெயர் என்ன தெரியுமா.. இப்படி ஒரு சுவராஸ்யமான புள்ளிவிவரத் தகவலை World of Statistics என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

கஜகஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த World of Statistics
. இந்த அமைப்பு அவ்வப்போது பல்வேறு சுவாரஸ்யமான புள்ளிவிவரத் தகவல்களை வெளியிடுவது வழக்கம். இதில் பல சர்ச்சைக்கிடமானது என்றாலும் கூட சில சுவாரஸ்யமானவையாகும்.



அந்த வகையில் இந்த புள்ளிவிவரத் தகவலை பார்க்கலாம். உலகிலேயே அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட பெயர்கள் என்று ஒரு பட்டியலை இந்த World of Statistics  அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் முகம்மது என்ற பெயர்தான் டாப்பில் உள்ளது. மொத்தம் 13,33,49,300 தடவை இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

அடுத்த இடத்தில் மரியா என்ற பெயர் வருகிறது. கிறிஸ்தவர்கள்தான் இந்தப் பெயரை பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். இந்தப் பெயர் 6,11,34,526 முறை பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

இதேபோல அதிக முறை பயன்படுத்தப்பட்ட பிற பெயர்கள் விவரம்:

நுஷி  - 5,58,98,624
ஜோஸ் - 2,99,46,427
வெய் (Wei) -1,71,45,807
அகமது - 1,49,16,476
யான் - 1,47,93,356
அலி - 1,47,63,733
ஜான் - 1,43,23,797
டேவிட்  - 1,34,29,576
லி - 1,31,66,162
அப்துல் - 1,21,63,978
அனா - 1,20,91,132
யிங் - 1,20,47,080
மைக்கேல் - 1,14,71,765
ஜூவான் - 1,13,72,603
அன்னா  - 1,13,50,336
மேரி - 1,13,33,767
ஜீன்  - 1,10,24,162
ராபர்ட் - 1,01,70,794
டேணியல் - 1,00,26,181
ஜோசப் - 86,30,833

இந்தப்  பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 2 பெயர்களும் உள்ளன. அது என்ன தெரியுமா..ஸ்ரீ மற்றும் ராம் என்பதாகும். ஸ்ரீ என்ற துணைப் பெயர் 64,73,133 முறை பயன்படுத்தப்பட்டுள்ளதாம். அதேபோல ராம் என்ற துணைப் பெயர் 57,43,068 முறை பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

அப்படிப் பார்த்தால் குமார் என்ற பெயரையும் பல லட்சம் பேர் இந்தியாவில் பயன்படுத்திக்கொண்டுதான் வருகின்றனர். இன்னும் கொஞ்சம் தோண்டி எடுத்தால் நம்ம ஊர் பெயர்களும் பெரிய லிஸ்ட்டாக தேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்