அடுத்த வைரஸ் வருது ரெடியாகிக்கோங்க.. எச்சரிக்கும் உலக சுகாதார மையம்

May 25, 2023,09:26 AM IST
நியூயார்க் : உருமாறிய அடுத்த வைரஸ் உலகம் முழுவதிலும் நோய் தொற்றை பரப்ப வர உள்ளது. அதனால் அனைவரும் அதை எதிர்கொள்ள தயாராக இருந்து கொள்ளும் படி உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ராஸ் அதனம் கிரிபேரியசஸ் எச்சரித்துள்ளார்.

2019 ம் ஆண்டின் இறுதியிலேயே கொரோனா பெருந்தோற்று உலக நாடுகளை மிரட்ட துவங்கி விட்டது. கொரோனா பெரும் தோற்றிற்கு அனைத்து நாடுகளும் லட்சக்கணக்கான உயிர்களை பலிகொடுத்துள்ளன. கோவிட் 19 க்கு பிறகும் உருமாறி பல வைரஸ்கள் அடுத்தடுத்து உருவாகி உலகையே ஸ்தம்பிக்க வைத்து விட்டன. கோவிட் 19 ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து பல நாடுகளால் இன்னும் மீண்டு வர முடியவில்லை. மக்களின் வாழ்க்கை முறை மாறி உள்ளது.



இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய டெட்ராஸ், கோவிட் 19 பெருந்தொற்றின் அவசர நிலை உலகம் முழுவதும் முடிவுக்கு வந்து விட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த 76 வது உலக சுகாதார கூட்டத்தில் பேசிய போது, உருமாறிய மற்றொரு வகை வைரஸ் புதிய வகையான நோயினை பரப்பி,மிரட்ட உள்ளது. இது உலகம் முழுவதும் அதிகப்படியான உயிர்களை கொல்லும் நோயாக இருக்கும் என  எச்சரித்துள்���ார். 

அடுத்த பெருந்தொற்று வந்து வீட்டின் கதவை தட்டுவதற்குள் நாம் தெளிவாக முடிவெடுத்து, அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். கோவிட் 19 உடல் ரீதியான பல சவால்களை நம் முன் வைத்து விட்டு சென்றுள்ளது. இதனால் உலகம் முழுவதும் சுகாதார ஒழுங்குமுறைகளை முறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கிறோம். 

மருத்துவமனைகள், மருத்துவர்கள், சுகாதாரா முன்பணியாளர்கள் என அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.

சுகாதார அவசர நிலையை சமாளிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கொரோனாவை போன்ற பயங்கர பேரழிவை இனி ஒரு போதும் இந்த உலகம் எதிர்கொள்ளக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

சனாதன சக்திகளை ஓங்க விட்டு விடாதீர்கள்.. திரைத்துறையினருக்கு திருமாவளவன் கோரிக்கை

news

மக்களவையில் முழங்க பிரியங்கா காந்தி தயார்.. வயநாடு தொகுதியில் தொடர்ந்து முன்னிலை!

news

வங்க கடலில் இன்று உருவாகிறது.. காற்றழுத்த தாழ்வு.. நாளை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

news

நவம்பர் 23 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

இன்று நிதானமாக செயல்பட வேண்டிய 2 ராசிக்காரர்கள் இவங்க தான்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

அதிகம் பார்க்கும் செய்திகள்