பாபா படத்தால் என் சினிமா வாழ்க்கையே போச்சு.. புலம்பும் மனிஷா கொய்ராலா!

Mar 30, 2023,02:16 PM IST
மும்பை : பாபா படத்தால் தென்னிந்திய சினிமாவில் தனது ஒட்டுமொத்த மார்கெட்டும் அழிந்து விட்டதாக கிட்டதட்ட 20 ஆண்டுகள் கழித்து தனது மன ஆதங்கத்தை வெளிப்படையாக கொட்டி தீர்த்துள்ளார் நடிகை மனிஷா கொய்ராலா.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து 2002 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாபா. மகா அவதார் பாபாஜியின் பெருமைகளை உணர்த்தும் படம். டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தை ரஜினியே தயாரித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினி தனது 100 வது படத்தில், தனது இஷ்ட தெய்வமான ஸ்ரீ ராகவேந்திரர் பற்றி எடுத்து, அவரே நடித்தார். இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதற்கு பிறகு ரஜினி நடித்த பக்தியை மையமாகக் கொண்ட படம் பாபா.



பாபா படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் ஆனாலும், படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்பதும் சில விமர்சனங்களையும் சந்தித்தது. பாபா படத்தில் ரஜினியுடன் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, கருணாஸ், டெல்லி கணேஷ், நம்பியார், சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் ஆரம்பத்தில் மனிஷா கொய்ராலாவை ரஜினி காதலிப்பது போலவும், பிறகு ஆன்மிகத்தில் கொண்ட ஆர்வம் காரணமாக மனிஷாவை விட்டு பிரிவதாக கதை அமைக்கப்பட்டிருக்கும். 

இதனால் ஹீரோயினான மனிஷா ஒரே சில காட்சிகளிலும், 2 பாடல்களிலும் மட்டுமே வந்து போனார். அதற்கு பிறகு பெரிதாக படங்களில் ஏதும் நடிக்காத மனிஷா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்று, அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் மீடியா ஒன்றில் அவர் பேட்டி அளித்திருந்தார். அதில், பாபா படத்தினால் அழிந்தேன். அது வெறும் தோல்வி அல்ல, மிகப்பெரிய டிசாஸ்டர் (பேரழிவு). பாபாவால் மொத்த தென்னிந்திய மொழிகளிலும் எனக்கு மார்கெட் சரிந்தது என குறிப்பிட்டிருந்தார்.

இந்த பேட்டி சோஷியல் மீடியாவில் கசிந்ததும், இதை ஏற்க ரஜினி ரசிகர்கள மறுத்து வருகின்றனர். பாபா படம் வந்த போதே இதில் எதற்காக இந்த அம்மாவை போய் ஹீரோயினா போட்டிருங்க என தலைவர் ஃபேன்ஸ் அதிருப்தி தெரிவித்தனர். படம் சரியாக ஓடாமல் போனதற்கு காரணமே இந்த அம்மாவை ஹீரோயினா போட்டது தான் காரணம் என கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்