"மாமன்னன்" மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கொடுத்து.. ஹேப்பியான உதயநிதி!

Jul 02, 2023,11:54 AM IST
சென்னை: மாமன்னன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் பரிசு அளித்துக் கெளரவித்துள்ளது ரெட்ஜெயன்ட் நிறுவனம்.

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன்னன். வடிவேலு முக்கியப் பாத்திரத்தில் நடிக்க உதயநிதி ஹீரோவாக இதில் நடித்துள்ளார். படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. விமர்சனங்களும் எதிர் விமர்சனங்களும் அனல் பறக்கின்றன. 

எங்கு பார்த்தாலும் மாமன்னன் படம் குறித்த பேச்சாகவே இருக்கிறது. இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜைக் கெளரவித்துள்ளது படத்தைத் தயாரித்த ரெட் ஜெயன்ட் நிறுவனம். இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் ஒரு டிவீட் போட்டுள்ளார்.



அதில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. 

அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிகரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி.   ரெட்ஜெயன்ட் மூவிஸ்  நிறுவனம்  மாரி செல்வராஜ்  சாருக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.



மாமன்னன் படத்தின் கதை பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது. இந்தக் கதை முன்னாள் சபாநாயகர் தனபால் குறித்த கதை என்று சிலரும், அப்படி என்றால் அப்போது மாவட்டச் செயலாளராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமிதானே.. அவரைத்தான் இப்படம் சீண்டுகிறதா என்று மறு தரப்பும் வாதங்களில் குதித்துள்ளனர்.

மிகவும் துணிச்சலான இந்தக் கதையில் உதயநிதி நடித்தது மிகப் பெரிய விஷயம்.. அவருக்குத்தான் மொத்தப் பாராட்டும் போக வேண்டும் என்று  அவரது ரசிகர்களும் பாராட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் வடிவேலுவின் நடிப்பும் பெருவாரியாக பேசப்படுகிறது.  

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்