"எங்களது தலைவர் அண்ணா".. அதிமுகவையும் சேர்த்து கொக்கி போட்ட ஸ்டாலின்!

Jul 10, 2023,09:52 AM IST
சென்னை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய க டிதத்தில் அதிமுகவின் பெயரையும் இணைத்துக் கூறியிருப்பது அதிமுக தொண்டர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், ஆளுநர் ஆர். என். ரவிக்கும் இடையே தொடர்ந்து உரசல் இருந்து கொண்டே இருக்கிறது. அவ்வப்போது அரசு நிகழ்ச்சிகளில் இருவரும் சந்தித்து சுமூகமாக பேசிக் கொள்வது போல இருந்தாலும் கூட நீரு பூத்த நெருப்பாக பிரச்சினை வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது.



இந்த நிலையில் ஆளுநர் ஆர். என். ரவி குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 19 பக்கங்களில் உள்ள அந்தக் கடிதம் தொடர்பான விவரங்கள் நேற்று வெளியாகி நாடு முழுவதும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

மிகக் கடுமையான குற்றச்சாட்டுக்களை முதல்வர் ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் வைத்துள்ளார். அதில் அனைவரையும் கவர்ந்த வாசகம் இதுதான்:

ஆர் என் ரவி அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற ஏற்கவியலாத அதிர்ச்சியை அளிக்கும் கருத்தை தெரிவித்துள்ளார். ஆளுநர் அவர்களின் இந்த செயல் தமிழ்நாட்டின் மீது அவருக்குள்ள அதீத வெறுப்பை காட்டுகிறது. மேலும் திராவிடத்தின் அடையாளமும், முன்னாள் முதலமைச்சரும், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் அடையாளமாகத் திகழ்பவருமான பேரறிஞர் அண்ணா அவர்களால் தமிழ்நாடு எனச் சூட்டப்பட்ட பெயரைக் களங்கப்படுத்துகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.



இந்தப் பத்தி அதிமுக தொண்டர்களைக் கவர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவையும் சேர்த்தே ஆளுநருக்கு எதிரான தனது போர்க்கள உத்திகளில் முதல்வர் ஸ்டாலின் இணைத்துப் பேசியிருப்பதாகவே இது கருதப்படுகிறது. அண்ணாவை அவமானப்படுத்தி விட்டார் ஆளுநர்.. அண்ணா திமுகவுக்கு மட்டும் சொந்தமல்ல.. அதிமுகவுக்கும் சொந்தம்தான்.. எனவே திமுக மட்டுமல்லாது அதிமுகவும் கூட ஆளுநருக்கு எதிரான போரில் துணை நிற்க வேண்டும் என்று ஸ்டாலின் மறைமுகமாக உணர்த்தியிருப்பதாகவும் இதற்கு அர்த்தம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அதிமுக தலைவர்கள் யாரும் இதுகுறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.ஆனால் நம்மையும் முதல்வர் இணைத்துக் கொண்டிருக்கிறாரே முதல்வர் என்று அதிமுக தொண்டர்கள் மகிழ்��தாக செய்திகள் தெரிவிக்கின்றன. முதல்வரின் இந்த உத்தியால் திமுக, அதிமுக ஒன்று.. "பாஜக வேறு" என்ற  செய்தியையும் அவர் டெல்லிக்குத் தெரிவிப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்