பிரதமர் ஆசைக்கு ‛ஆப்பு’?: செந்தில் பாலாஜி மூலமாக எதிர்க்கட்சிகளையும் ‛பஞ்சாயத்துக்கு’ அழைக்கும் ஸ்டா

Jun 16, 2023,12:17 PM IST
சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டது தான் கடந்த 4 நாட்களாக இந்தியா அளவில் டிரெண்டிங்காக இருக்கும் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. இந்த விவகாரத்தை வைத்து பாஜக - திமுக இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டி வருகிறது. ஸ்டாலின் உட்பட திமுக.,வினர் அனைவரும் பாஜக.,வை திட்டி தீர்த்து வருகின்றனர்.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து அழைத்து சென்றது. வழியில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை 18 மணிநேரமாக ஒரே இடத்தில் அமர வைத்து மனரீதியாக பலவீனப் படுத்தியதாகவும், அவரை துன்புறுத்தியதாகவும் செந்தில் பாலாஜி தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.



அமலாக்கத்துறையின் இந்த செயல் முத��மைச்சர் ஸ்டாலினுக்கு கோபத்தை வரவழைத்துள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க.,வை வீழ்த்த திட்டமிட்டு வரும் ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவான பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்தவே திராவிட மாடலை இந்தியா முழுவதும் கொண்டு செல்வோம் என அவ்வபோது கூக்குரல் எழுப்பி வந்தார். டில்லியிலும் தங்கள் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். எதிர்க்கட்சியினரை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து சில கூட்டங்களையும் நடத்தினார். இந்த நிலையில், பா.ஜ.க., தூண்டுதலால் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தப்பட்டதால் தங்கள் ஆட்சிக்கு கெட்டப் பெயர் வந்துவிடுமோ என பயந்து ஸ்டாலின், ஆவேசமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், ‛எதிர்த்தால், அக்கட்சியின் அமைச்சர் மணீஷ் சிசோடியாவை கைது செய்கின்றனர். பீஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் எதிர்த்தால், அக்கட்சியை சேர்ந்த பீஹார் துணை முதல்வரான தேஜஸ்வி யாதவ்க்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்துகிறது. மேற்குவங்கத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பா.ஜ.க.,வை எதிர்த்ததால், அக்கட்சியினரை ரெய்டு செய்கின்றனர். 

அதேபோல், கர்நாடக காங்., தலைவர் டி.கே.சிவகுமாரை கைது செய்தனர். அவர் கர்நாடக தேர்தலில் வெற்றிப்பெற்று இப்போது துணை முதல்வராகவே ஆகிவிட்டார். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது, தெலுங்கானாவில் அமைச்சருக்கு தொடர்புள்ள இடங்களில் ரெய்டு, சத்தீஸ்கரில் முதலமைச்சர் தொடர்பான இடங்களில் ரெய்டு; ஆனால் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத்தில் எல்லாம் ரெய்டு நடத்தப்படாது. ஏனெனில், அங்கே எல்லாம் ஆட்சியில் இருப்பது ‘உத்தமபுத்திரன்’ பா.ஜ.க.,. அந்த மாநிலங்கள் எல்லாம் வருமான வரித்துறைக்கோ, அமலாக்கத்துறைக்கோ, சிபிஐ.,க்கோ தெரியாது’ என கடிந்து கொண்டார்.

அவரின் இந்த பேச்சில் சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ், ஆம்ஆத்மி போன்ற சில எதிர்க்கட்சிகளை குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம், அந்த கட்சியினரிடையே விசாரணை அமைப்புகள் அழுத்தம் கொடுத்தது மட்டுமின்றி, திமுக.,வுக்கு வந்துள்ள நெருக்கடிக்கு இந்த கட்சிகளும் சேர்ந்து குரல் கொடுத்து பா.ஜ.க.,வை இன்னும் வேகமாக எதிர்க்க வேண்டும் என்பதே. 

எனவே, இந்த கட்சிகளுடன் மற்ற எதிர்க்கட்சிகளும் வந்து திமுக அமைச்சருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பட்சத்தில் ஸ்டாலினின் மறைமுக வேண்டுகோளுக்கு செவி சாய்த்து எதிர்க்கட்சிகள் வருவதாக நினைத்துக்கொண்டு, தேசிய அரசியலில் இழந்த பெருமையை மீண்டும் நிலைநிறுத்த ஸ்டாலின் திட்டமிடுகிறார். அதேபோல் பல கட்சிகள் அமலாக்கத்துறை ரெய்டுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டன. ஸ்டாலினின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு, பிரதமர் ஆசைக்கு இது கைகொடுக்குமா அல்லது பா.ஜ.க.,வின் அழுத்தம் மேலும் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செந்தில் பாலாஜி கைது விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு திமுக தலைமை ஏற்க ஸ்டாலின் பிளான் போடுகிறார். ஒருவேளை திமுக தலைமையை மற்ற எதிர்க்கட்சிகள் ஏற்கும் பட்சத்தில் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என ஸ்டாலின் ஸ்கெட்ச் போடுகிறார். ஆனால் ஸ்டாலினின் பிரதமர் கனவுக்கு ஆப்பாக தான் அமலாக்கத்துறை ரெய்டு, செந்தில் பாலாஜி கைது நடந்துள்ளது. காரணம், தமிழகத்தில் திமுக.,வை லாக் செய்ய பாஜக பெரிய பிளானாக போட்டு வருகிறது. அமலாக்கத்துறை விசாரைணயில் செந்தில் பாலாஜி வாயை திறந்தால் திமுக.,வில் பல முக்கிய "தலைகள்" சிக்கும் என்பதால் தான் ஸ்டாலின் இத்தனை ஆவேசம் காட்டுகிறார்.

செந்தில் பாலாஜி கைத��, திமுக.,விற்கு பாஜக வைத்துள்ள மறைமுக 'செக்'காக பார்க்கப்படுகிறது. அமலாக்கத்துறையின் பிடி இறுகினால் திமுக ஆட்சியே கவிழக் கூட வாய்ப்பு ஏற்படும். அப்படி நடந்தால் பிரதமராகும் ஸ்டாலின் கனவு, கனவாகவே போய்விடும். கிட்டதட்ட தேர்தலில் கூட போட்டியிட முடியாத அளவிற்கு இருக்கும் ராகுல் காந்தியின் நிலைமை ஸ்டாலின் உள்ளிட்ட திமுக புள்ளிகளுக்கு வரலாம். அது தான் ஸ்டாலினின் ஆவேசத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்