முடிவு எடுத்தாச்சு.. குமாரசாமி கட்சியின் அறிவிப்பால் உச்சகட்ட பரபரப்பில் கர்நாடகா!

May 12, 2023,12:56 PM IST
பெங்களுரு : கர்நாடகாவில் புதிய அரசு அமைவதற்கு யாருடன் கூட்டணி சேர போகிறோம் என்பது பற்றி முடிவு எடுத்து விட்டோம் என குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது. இதனால் கர்நாடக அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே பரபரப்பாக கர்நாடக அரசியல் நிலவரத்தை கவனிக்க துவங்கி உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10 ம் தேதி நடந்து முடிந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் மே 13 ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஆனால் இதுவரை வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பெரும்பாலான கருத்துக்கணிப்புக்கள் கர்நாடகாவில் தொங்கு சட்டசபையே அமையும். யார் ஆட்சி அமைக்க வேண்டும் என முடிவு செய்யும் கிங் மேக்கராக குமாரசாமி இருப்பார் என தெரிவித்துள்ளன.



இதனால் காங்கிரசும், பாஜக.,வும் போட்டி போட்டு��் கொண்டு தங்களுக்கு ஆதரவு அளித்து, கூட்டணி அமைக்கும் படி குமாரசாமி கட்சிக்கு துண்டு போட்டு வைத்துள்ளன. ஆனால் குமாரசாமி தற்போது இந்தியாவில் இல்லை. சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் குமாரசாமி கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான தன்வீர் அகமது, யாருடன் கூட்டணி அமைப்பது என முடிவு எடுத்தாச்சு என அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு தேசிய கட்சிகளும் எங்களை அணுகி ஆதரவு கேட்டுள்ளன. யாருடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க துணை நிற்பது என்பது பற்றி முடிவு எடுத்தாகி விட்டது. சரியான நேரம் வரும் போது வெளிப்படையாக அறிப்போம் என தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டதாக மதசார்பற்ற ஜனதா தளம் கூறி உள்ள தகவலை பாஜக மறுத்துள்ளது. தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளது. பாஜக, மதசார்பற்ற ஜனதாதளத்தை தொடர்பு கொள்ளவில்லை என பாஜக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும், 120 இடங்களில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். இது வரை கிடைத்த கள நிலவர தகவலின்படி 120 சீட்களை நாங்கள் கைப்பற்றுவோம் என பாஜகவின் சோபா கரந்தலாஜே தெரிவித்துள்ளார். அதே சமயம் இரண்டு தேசிய கட்சிகளும் தங்களை தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டதாக மதசார்பற்ற ஜனதா தளமும் உறுதியாக கூறி வருகிறது.

குமாரசாமியைப் பொறுத்தவரை அவர் இதுவரை ஒருமுறை கூட மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் முதல்வரானதே கிடையாது. மாறாக, அதிர்ஷ்டத்தால் மட்டுமே முதல்வராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியும் காங்கிரஸோ அல்லது பாஜகவோ பெரும்பான்மை பலம் பெறாமல் போகும். அப்படிப்பட்ட சமயத்தில் தனக்கு  முதல்வர் பதவியைத்  தரும் கட்சிக்கு  அவர் ஆதரவு கொடுத்து முதல்வராக சில காலம் இருப்பார்.. பின்னர் அந்தக் கட்சியிடம் முதல்வர் பதவியை பறி கொடுத்தோ  அல்லது விட்டுக்கொடுத்து விட்டோ விலகுவார் என்பதுதான் வரலாறு.. இந்த முறையும்  இதே வரலாறு நடக்குமா அல்லது தீர்ப்பு வேறு மாதிரி இருக்குமா என்பது நாளை தெரிந்து விடும்.

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்