சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்.. பிராண்ட் அம்பாசிடராக மாறினார்.. கத்ரீனா கைஃப் !

Feb 14, 2024,06:06 PM IST

சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் ஒப்பந்தம் செய்துள்ளார்.


2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். டி20 கிரிக்கெட் லீக்கில் இது 17வது ஐபிஎல் தொடராகும். இந்த ஐபிஎல் சீசன் எப்போது நடைபெறும் என்ற தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த ஐபிஎல் தொடர், தோனி கேப்டனாக களமிறங்கும் கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்படுவதால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.




ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றிய தகவல்களை அவ்வப்போது ஐபிஎல் நிர்வாகம் அறிவித்து வருகிறது. இதன் அடிப்படையில் சமீபத்தில் சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர் உரிமையை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தீபக் சாகர், முகேஷ் சவுத்ரி உள்ளிட்டோர் சென்னை வீரர்களின் ஜெர்ஸியை  அறிமுகம் செய்தனர்.


தற்போது, சிஎஸ்கே அணியின் பிராண்ட் அம்பாசிடராக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணி குறித்து வீரர்கள் பங்கேற்கும் அனைத்து விளம்பரங்களிலும் கத்ரீனா கைஃப் இடம் பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்