கர்நாடக சட்டசபைத் தேர்தல் ... தொடங்கியது வாக்குப் பதிவு.. காலையிலேயே சூப்பர் கூட்டம்!

May 10, 2023,07:19 AM IST

பெங்களூரு: கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்க ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த இடங்களுக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று நடைபெறுகிறது. கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இவர்களது வசதிக்காக மாநிலம் முழுவதும் 58 ஆயிர்து 545 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


பாதுகாப்புப் பணியில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம்  போலீஸார், மத்தியப் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரம் வரலாறு காணாத வகையில் அனல் பறக்கும் விதத்தில் இருந்தது. உள்ளூர் தலைவர்களை விட  தேசியத் தலைவர்களையே பாஜக அதிகம் நம்பி களத்தில் இறக்கியிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி இதுவரை இல்லாத அளவுக்கு கர்நாடகத்தில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அமித் ஷாவும் தீவிரப் பிரச்சாரம் செய்துள்ளார்.




காங்கிரஸ் தரப்பில் ராகுல்காந்தி மக்களைக் கவரும் வகையில் சூறாவளிப் பிரச்சாரம் செய்திருந்தார். பிரியங்கா காந்தியும் பல்வேறு ஊர்களில் ரோட் ஷோ நடத்தினார். சோனியா காந்தியும் தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். பிரச்சாரத்தின்போது பரபரப்பான குற்றச்சாட்டுக்களும், கடுமையான வசவுகளும், விமர்சனங்களும் தலைவிரித்தாடின. இப்படிப்பட்ட சூழலில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.


முக்கிய வேட்பாளர்கள்: 


முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் (காங்கிரஸ் - ஹுப்பள்ளி தார்வாட் மேற்கு), முதல்வர் பசவராஜ் பொம்மை (ஷிக்காவன்- பாஜக),  முன்னாள் முதல்வர் சித்தராமையா (வருணா - காங்கிரஸ்),  விஜயேந்திரா எடியூரப்பா  (பாஜக - ஷிகாரிபுரா),  கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் (கனகபுரா),  முன்னாள் முதல்வர்  எச்.டி.குமாரசாமி (மதச்சார்பற்ற ஜனதாதளம் - சன்னபட்டனா), பிரியங்க் கார்கே (காங்கிரஸ் - சித்தாபூர்), தேவே கெளடா பேரன் நிகில் குமாரசாமி (மதச்சார்பற்ற ஜனதாதளம் - ராமநகரா),  சி.டி.ரவி (பாஜக - சிக்மகளூர்)


ஸ்கூட்டரில் ஏறி ஹோட்டலுக்குப் போன ராகுல் காந்தி.. மறக்காமல் அந்த ஹெல்மெட்!


ஆளும் கட்சியான பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் நம்பிக்கையில் உள்ளது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் உற்சாகத்தில் உள்ளது. இருவருக்கும் இடையே புகுந்து கிங் மேக்கராகும் ஆசையில் மதச்சார்பற்ற ஜனதாதளம் காத்துள்ளது. மக்கள் யார் பக்கம் என்பது மே 13ம் தேதி தெரிய வரும். அன்றுதான் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள்   எண்ணப்படவுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

ஸ்லோவான புயல்.. ஏன் இந்தத் தாமதம்?.. காற்றின் வேக மாறுபாடுதான் காரணம்.. தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்

news

ஆழந்த காற்றழுத்தம்.. புயலாக மாறுவதில் தாமதம்.. 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்!

news

Cyclone Fengal.. நவம்பர் 30ம் தேதி பரங்கிப்பேட்டை- சென்னை இடையே கரையைக் கடக்கும்.. பிரதீப் ஜான்

news

நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு விவாகரத்து.. சென்னை குடும்ப நல கோர்ட் உத்தரவு

news

Cyclone Fengal precaution.. நாகை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!

news

செங்கல்பட்டு அருகே விபரீதம்.. படுவேகமாக வந்த கார் மோதி.. மாடு மேய்த்த 5 பெண்கள் பரிதாப மரணம்!

news

Sabarimalai Iyappan temple.. சபரிமலை 18 படிகள் எதை உணர்த்துகின்றன தெரியுமா ?

news

15 வருட நட்பு.. காதலரை சூசகமாக அறிமுகப்படுத்தி வைத்த கீர்த்தி சுரேஷ்.. குவியும் வாழ்த்துகள்!

news

Chennai climate.. வாடை வாட்டுது.. செம குளிரு.. ஜிலுஜிலு காத்து.. இது சென்னையா இல்லை ஊட்டியா??

அதிகம் பார்க்கும் செய்திகள்