பான் இந்தியன் வில்லன் ஆகிறாரா கமல்?.. சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

May 31, 2023,10:57 AM IST
சென்னை : கமல்ஹாசன் குறித்த ஒரு பரபரப்பான தகவல் சினிமா காதலர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்திய சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக டாப் ஹீரோக்களில் ஒருவராகவும், வசூலை குவிக்கும் நடிக்கராகவும் இருந்து வருகிறார் கமல். நான்கு ஆண்டுகள் பிரேக்கிற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வெளிவந்த விக்ரம் படமும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்த இந்த படம் உலகம் முழுவதும் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. 



தற்போது டைரக்டர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார் கமல். இதைத் தொடர்ந்து  கமலின் கமல் 233 படத்தை டைரக்டர் ஹெச்.வினோத் இயக்க போவதாக தகவல் அடிபடுகிறது. அதற்கு பிறகு தான் கமல் - மணிரத்னம் இணையும் கமல் 234 படத்தின் வேலைகள் துவங்கபட உள்ளதாம்.

இதற்கிடையில் லேட்டஸ்ட் தகவல் ஒன்று சினிமா வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது, பான் இந்தியா படம் ஒன்றில் மெயின் வில்லனாக நடிக்க கமல்ஹாசன் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் பிரபாசுக்கு வில்லனாக தான் கமல் நடிக்க போகிறாராம். இந்த படத்தில் தீபிகா படுகோன் தான் ஹீரோயினாம். மிக கடினமான இந்த நெகடிவ் கேரக்டரை கமல் மட்டும் தான் பண்ண முடியும் என தயாரிப்பாளர் அஸ்வினி தத் நினைக்கிறாராம்.

கமலை தவிர வேறு யாராலும் இந்த கேரக்டரை பண்ண முடியாது என்பதால் இதில் அவரை நடிக்க ஒப்புக் கொள்ள வைத்துள்ளார்களாம். இதற்காக கமலுக்கு ரூ.150 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப் பச்சனும் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். அவருக்கும் பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். இவர்கள் தவிர சூர்யா, மகேஷ் பாபு, திஷா பதானி ஆகியோரிடமும் இந்த படத்தில் நடிக்க பேசப்பட்டு வருகிறதாம்.

புராஜக்ட் கே என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்காக கமல் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இதை முடித்து விட்டு, தனது மற்ற படங்களில் நடித்துக் கொண்டே பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க போகிறாராம். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் தொட்ட எதையும் சாதாரணமாக விட்டதில்லை.. அழுத்தமான முத்திரை பதித்து விட்டுத்தான் வந்துள்ளார். அவர் வில்லன் ரோல் செய்தாலும் அது அசாதாரணமான படமாக நிச்சயம் அமையும்.. அவரது வில்லத்தனமான நடிப்புக்கு மற்றவர்கள் எப்படி ஈடு கொடுத்து நடிப்பார்கள் என்பதுதான் பெரும் ஆச்சரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்