Senapathy is Back...சத்தம் இல்லாமல் அதிரடி காட்ட வரும் இந்தியன் 2

May 15, 2023,10:59 AM IST
சென்னை : டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில்  கமலஹாசன் நடித்த இந்தியன் படம் ரிலீசாகி 27 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதை லைகா நிறுவனம் சமீபத்தில் போஸ்டர் வெளியிட்டு கொண்டாடியது. 

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ள ஷங்கர் - கமல் கூட்டணியில் இந்தியன் 2 படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. படம் பட்டையைக் கிளப்பும் வகையில் பக்காவாக ரெடியாகி வருகிறதாம்.

பல போராட்டங்கள், பிரச்சனைகள், ரசிகர்களின் எதிர்பார்ப்பு, காத்திருப்பிற்கு பிறகு இந்தியன் 2 படம் ஒரு வழியாக இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டி உள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. லேட்டஸ்ட் தகவலின் படி, இந்தியன் 2 படத்திற்காக தனது பகுதிக்காக டப்பிங் பேசும் பணிகளை கமல் துவக்கி உள்ளாராம். அதே சமயம் மற்றொரு புறம் டைரக்டர் ஷங்கர், படத்தின் எடிட்டிங் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம்.



எடிட்டிங் வரை வந்தாலும், தனக்கு திருப்தி அளிக்காத காட்சிகளை மீண்டும் எடுத்து, படத்தின் வேலைகளை விரைவில் முடிக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே கமல் தனது பகுதி டப்பிங் வேலைகளை ஏறக்குறைய முடித்து விட்டாராம். விரைவில் தனது அடுத்த படத்தின் வேலைகளை கமல் துவங்க உள்ளதால் இந்தியன் 2 படத்தில் மீதமுள்ள வேலைகளை முடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறாராம் கமல்.

ரசிகர்களை இனியும் காக்க வைக்க வேண்டாம் என எடிட்டிங் வேலைகளை சீக்கிரம் முடித்து விரைவில் இந்தியன் 2 படத்தின் டீசரை வெளியிட ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் ரசிகர்ளுக்காக, அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு, எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அளவிற்கு ஏதாவது சீக்ரெட்டை ஷங்கர் வைத்துள்ளாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

1996 ம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 வர உள்ளது. பான் இந்தியன் படமாக மிக பிரம்மாண்டமாக இந்தியன் 2 படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்திற்காக மீண்டும் சேனாபதி என்கிற இந்தியன் தாத்தா கெட்அப்பிற்கு மாறி உள்ளார் கமல். இந்த படத்தில் கமல் பல விதமான தோற்றங்களில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தியன் 2 படத்திற்காக விவேக், நெடுமுடி வேணு ஆகியோர் கடைசியாக நடித்த சீன்களை நீக்காமல் அப்படியே பயன்படுத்து உள்ளாராம் ஷங்கர். இந்தியன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நிலையில் இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!

news

சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்

news

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!

news

வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

news

இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!

news

மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

news

மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்