புது ஓனர் பிடிக்கலை.. வீட்டிலிருந்து வெளியேறி 64 கி.மீ. நடந்தே.. பழைய ஓனர் வீட்டுக்கு வந்த நாய்!

May 01, 2023,04:18 PM IST


டப்ளின்: தன்னை வளர்த்து வந்த உரிமையாளர் வேறு ஒருவரிடம் தன்னை விற்றதை விரும்பாத நாய் ஒன்று, புது ஓனர் வீட்டிலிருந்து வெளியேறி 64 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தே வந்து  தனது பழைய உரிமையாளரிடமே வந்து சேர்ந்த செயல் அயர்லாந்து நாட்டை வியக்க வைத்துள்ளது.


நாயை விட யாரும் சிறப்பான முறையில் அன்பையும், பாசத்தையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்த முடியாது என்று சொல்வார்கள்.  அதை உண்மையாக்கியுள்ளது அயர்லாந்தைச் சேர்ந்த கோல்டன் ரீட்ரீவர் ரக நாய் ஒன்று.


அந்த நாயின் பெயர் கூப்பர். லன்டன்டெர்ரி என்ற பகுதியில் உள்ள டோபர்மோர் என்ற இடத்தில்  இது வளர்ந்து வந்தது. ஆனால் இதன் உரிமையாளர், கூப்பரை,  வடக்கு அயர்லாந்தின் டைரோன் என்ற நகரைச் சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் கூப்பருக்கு இது பிடிக்கவில்லை. தன்னை வளர்த்து வந்த உரிமையாளரைப் பிரிய முடியாமல் தவித்தது. கத்திப் பார்த்தும் கூட பலன் தரவில்லை.


புதிய உரிமையாளர் கூப்பரை தனது வீட்டுக்குக் கொண்டு வந்தார். அங்கும் இருப்பு கொள்ள முடியாமல் தவித்து வந்தது கூப்பர். இந்த நிலையில், கூப்பர் தனது புதிய வீட்டிலிருந்து நைசாக வெளியேறியது. அங்கிருந்து தனது பழைய வீட்டுக்கு நடக்கத் தொடங்கியது. கிட்டத்தட்ட 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழைய வீட்டுக்கு அது நடந்தும்,ஓடியுமாக வந்து சேர்ந்தது.  புதிய வீட்டுக்குப் போன கூப்பர் திடீரென வீட்டுக்கு வந்து நிற்பதைப் பார்த்து அதன் பழைய உரிமையாளர் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தார்.


புதிய வீட்டிலிருந்து பழைய வீட்டுக்கு வர அந்த நாய்க்கு ஒரு மாத காலம் பிடித்துள்ளது. அங்குமிங்குமாக அலைந்து திரிந்து தனது பழைய வீட்டைக் கண்டுபிடித்து கூப்பர் நாய் வந்த செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.  பகல் நேரங்களில் கூப்பர் ஆங்காங்கே தங்கியுள்ளது. இரவில் மட்டும்தான் அது பயணித்துள்ளது. யாருடைய உதவியும் இல்லாமல் தனது பழைய உரிமையாளர் வீட்டுக்கு அது வந்து சேர்ந்துள்ளது.


கூப்பரின் புதிய உரிமையாளர் நிகல் பிளமிங் இதுகுறித்துக் கூறுகையில், கூப்பர் பத்திரமாக இருப்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்.  தற்போது கூப்பர் மிகவும் பலவீனமாக இருக்கிறது. மெல்ல மெல்ல சாப்பிடுகிறது. விரைவில் அது நலமாகும் என்று நம்புகிறேன் என்றார்.


நன்றியிலும், பாசத்திலும்.. மனிதர்களை விட நாய்கள் பல மடங்கு உயர்ந்தவைதான்.. கூப்பர் அதைத்தான் நிரூபித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஆழந்த காற்றழுத்தம்.. புயலாக மாறுவதில் தாமதம்.. 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்!

news

Cyclone Fengal.. நவம்பர் 30ம் தேதி பரங்கிப்பேட்டை- சென்னை இடையே கரையைக் கடக்கும்.. பிரதீப் ஜான்

news

நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு விவாகரத்து.. சென்னை குடும்ப நல கோர்ட் உத்தரவு

news

Cyclone Fengal precaution.. நாகை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!

news

செங்கல்பட்டு அருகே விபரீதம்.. படுவேகமாக வந்த கார் மோதி.. மாடு மேய்த்த 5 பெண்கள் பரிதாப மரணம்!

news

Sabarimalai Iyappan temple.. சபரிமலை 18 படிகள் எதை உணர்த்துகின்றன தெரியுமா ?

news

15 வருட நட்பு.. காதலரை சூசகமாக அறிமுகப்படுத்தி வைத்த கீர்த்தி சுரேஷ்.. குவியும் வாழ்த்துகள்!

news

Chennai climate.. வாடை வாட்டுது.. செம குளிரு.. ஜிலுஜிலு காத்து.. இது சென்னையா இல்லை ஊட்டியா??

news

48 வயதைத் தொட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. முதல்வர் கொடுத்த முத்தம்.. குவியும் வாழ்த்துகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்